search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகத்தில் மழை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 11-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° -28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 9-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    8 மற்றும் 9-ந்தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° -28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 6-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    01.07.2024 முதல் 05.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
    • கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, களியல், குழித்துறை, தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்ட இருக்கிறது.

    முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 22.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 328 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்தனர்.

    அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.19 அடியாக இருந்தது. அணைக்கு 1715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மதகுகள் வழியாக 662 கன அடி தண்ணீரும், உபரிநீராக 2028 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.26 அடியாக உள்ளது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 17.02 அடியாக உள்ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 17.12 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 45.77 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 22.20 அடியாகவும் உள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் நேற்று 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரங்கோணம் பகுதிகளில் ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    • 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே, இன்று முதல் 1-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஒரிரு இடங்களில், 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    • வால்பாறையில் பெய்த மழைக்கு அட்டகட்டி 16-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன.
    • தென்காசி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் சிவப்பு அலர்ட் எச்சரிக்கையும், 21,22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பெய்த மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மீண்டும் மழை பெய்தது. நள்ளிரவில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. அங்கு 103 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவி பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நீர்நிலைகள் அருகே குளிக்க செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோவையிலும் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளான ஊஞ்சவேலம்பட்டி, புளியம்பட்டி, ஏரிப்பட்டி, சுந்தரகவுண்டனூர், தீப்பம்பட்டி, சிஞ்சுவாடி பகுதிகளில் கனமழை கொட்டியது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.


    வால்பாறையில் பெய்த மழைக்கு அட்டகட்டி 16-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து சென்று பாறைகளை அப்புறப்படுத்தி குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மரங்களும் முறிந்து விழுந்தன.

    மலைரெயில் பாதையில் பாறை விழுந்ததால், ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டபோது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களையொட்டியுள்ள உத்திர காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஒடுகத்தூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆலங்காயத்தில் மின்னல் தாக்கி 2 பேர் காயம் அடைந்தனர்.

    வெள்ளக்குட்டையில் மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன.

    நெல்லை, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்கிறது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடி ஆறு பகுதியில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    தென்காசி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் சிவப்பு அலர்ட் எச்சரிக்கையும், 21,22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    குற்றால அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தேத்தாக்குடி, தோப்புத் துறை,ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் துறை அறிவிப்பு காரணமாக இன்று மீனவர்கள் 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில், திருப்புங்கூர், புங்கனூர், பட்டவர்த்தி, இளந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அணைக்காடு, முதல்சேரி, பள்ளிகொண்டான், சாந்தாங்காடு, கொண்டிக்குளம், அலிவலம், நடுவிக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி சிங்கலாண்டியில் வீடு ஒன்று இடிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    தமிழகத்தில் பல இடங்களில் நீடிக்கும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    • கடந்த 4 மாதத்திற்கு பிறகு சென்னையில் தற்போது மழை தூறலும் ரம்மியமான சூழலும் நிலவி வருகிறது.
    • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் வெயில் இந்த ஆண்டு கடுமையாக தாக்கி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப் பகுதியையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்தது.

    சுட்டெரித்த வெயிலின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பித்து குளிர்ந்த காற்று, மழை சூழலை அனுபவித்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    கடும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலும், தெரு வீதிகளிலும் காற்றுக்காக படுத்து தூங்கினார்கள். கடந்த 4 மாதத்திற்கு பிறகு சென்னையில் தற்போது மழை தூறலும் ரம்மியமான சூழலும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் லேசாகவும், ஒரு சில மாவட்டங்களிலும் கன மழையும் பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் வருகிற 19-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (18-ந்தேதி) 20 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 20-ந்தேதி அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்கள், மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலை விசியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 3,4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை இருந்தது.

    தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. 110 டிகிரி வரை தற்போது வெயில் தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இன்று (11-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அவ்வபோது சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
    • 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் அவ்வபோது சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
    • டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.

    * கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது.

    * கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.

    * 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென்மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

    * சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * ஜனவரி மாதத்தில் கடலூரில் 130 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.

    * புதுச்சேரியில் ஜனவரி மாதத்தில் நேற்று பெய்ததே அதிகபட்ச மழையாகும்.

    * அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    *திருவாரூர், நாகையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×