search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தூா்"

    • முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது.
    • சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது.

    காங்கயம் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 3-ந் தேதிமுதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மூலனூா், வெள்ளக்கோவில், கொடுமுடி, சிவகிரி ஆகிய பகுதிகளிலும் பல விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனா். முத்தூா் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இத்துடன் எள் விற்பனையும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

    இதையடுத்து வணிகா்கள், உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடப்பு எள் அறுவடைப்பருவம் முடியும் வரை ஜூன் 3 -ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முத்தூா் விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் எள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் எள் வரத்து இல்லை.14,528 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 6,120 கிலோ.தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.25.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.15க்கும், சராசரியாக ரூ.24.15க்கும் விற்பனையானது.69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 2,298 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.30க்கும், சராசரியாக ரூ.80.80க்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தம் 99 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 7.10 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.

    இவற்றின் எடை 5,706 கிலோ.தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.45.81 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,987 கிலோ. கொப்பரை கிலோ ரூ.68.70 முதல் ரூ.81.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.77.35.ஏலத்தில் மொத்தம் 109 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.2.65 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    ×