என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண் விஞ்ஞானி"
- வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.
- மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.
உடுமலை :
மரப்பயிர்களில் பூச்சிகள் தாக்குதலுக்கு, முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குறித்து வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பூச்சியியல் துறை விஞ்ஞானி ஜான் பிரசாந்த் ஜேக்கப் கூறியதாவது :- பூச்சி தாக்குதலுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது முக்கியம்.அதன்படி மரப்பயிர்களை நடவு செய்யும் வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.தண்ணீர் தேங்காமல் முறையான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். மண்ணை முழுமையாக பரிசோதித்த பின் மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.மரப்பயிர்களை நடவு செய்யும்போது இயற்கை உரங்களையிட்டு நட வேண்டும். களைத்தாவரங்களை தொடர்ந்து நீக்கி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றுதல், ஒளி பொறிகளை வைத்து பூச்சிகளை பிடித்தல், சரியான ஊடு பயிரிடுதல் ஆகியவற்றை பின்பற்றலாம்.ஒரே இன மரப்பயிர்களை அருகருகே நடுவதால் பூச்சி விரைவாக பரவி விடும். ஆகவே பல்வேறு இனப்பயிர்களை நட வேண்டும். வேளாண் நிலத்தில் அகற்றப்படும் களைச்செடிகள் எரிக்கப்படும்போது பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார்.
- வேளாண்மை உதவி அலுவலர் வினோத், அலுவலர்கள் சுஜி, அனுசியா உட்பட பலர் பேசினர்.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் சார்பில் அசநல்லிபாளையத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார். இதில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி கலையரசன் பேசியதாவது:-
தேனீ வளர்ப்பின் போது புகை மூட்டி தேன் எடுப்பதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். புகையில்லாமல் தேன் எடுப்பது குறித்த பயிற்சியை வழங்கி வருகிறோம். தரமான தேன் கிலோ 1,000 ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. அதற்கு சந்தையில் நிலையான கிராக்கி உள்ளது.விவசாய தோட்டங்களில் தேனீ வளர்ப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரை அயல் மகரந்த சேர்க்கை நடக்கும். இதனால் விவசாயிகளுக்கு தெரியாமலேயே மகசூல் அதிகரிக்கும். சாகுபடி பெருக, விவசாயிகளுக்கு மறைமுக நண்பனாக தேனீக்கள் உள்ளன. தேனீ வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு அங்கம் என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வேளாண்மை உதவி அலுவலர் வினோத், அலுவலர்கள் சுஜி, அனுசியா உட்பட பலர் பேசினர்.
- உலகில் முதன் முறையாக நானோ யூரியா என்ற உரத்தை மத்திய அரசின் இப்கோ நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.
- திருப்பூர் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை :
மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் உலகில் முதன் முறையாக நானோ யூரியா என்ற உரத்தை மத்திய அரசின் இப்கோ நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நானோ யூரியாவை திருப்பூர் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் நானோதொழில்நுட்ப துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்ரமணியன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-
சாதாரணமாக பயன்படுத்தப்படக்கூடிய யூரியா, மண்ணில் அடி உரமாக இடும் போதோ அல்லது மேல் உரமாக இடும் போதோ அதில் உள்ள தழைச்சத்து, 30 முதல் 35 விழுக்காடு மட்டுமே பயிர்களால் பயன்படுத்தப்படுகிறது.எஞ்சிய 65 முதல் 70 சதவீதம் உயிர்ச்சத்து மண்ணில் கரைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் மீதியுள்ள உரச்சத்து ஆவியாகி, வளி மண்டலத்துடன் கலந்து வீணாகிறது. இதனால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரியாவில் உள்ள தழைச்சத்தை பயிர்கள் பயன்படுத்தும் திறன்,30 முதல் 35 சதவீதம் அளவுக்கு மேல் அதிகரிக்கப்படவில்லை.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கடந்த 12 ஆண்டுகளாக நானோ உரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவ்வகை உரங்கள் மூலம் உரத்தின் திறன் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்