என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "பிரசான்ந்த் நீல்"
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள படம் விக்ரம்.
- இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.
ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது. உலக அளவில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டி திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/07/11/1727747-1.jpg)
விக்ரம்
இந்நிலையில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சமூக வலைதளத்தில், "விக்ரம் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாக காண்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது. அனிருத், நீங்கள் ஒரு ராக் ஸ்டார். லோகேஷ், எப்பொழுதும் உங்களது படங்களுக்கு நான் ரசிகன். சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவை நினைத்து பெருமையாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to the entire team of #Vikram. Watching @ikamalhaasan sir, @VijaySethuOffl and #FahadhFaasil together was a feast. Always a big admirer of your work @Dir_Lokesh.
— Prashanth Neel (@prashanth_neel) July 11, 2022
Your a rockstar @anirudhofficial.
Very proud of our masters @anbariv, wishing you both more success! https://t.co/dADow8CD0Y