என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாறைக்குழி"
- பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது.
- இரவு 11 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கணபதிநகரில் தனியாருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட பாறைக்குழி உள்ளது. அங்கு திருமுருன்பூண்டி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. இதன்பேரில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாறைக்குழி ஆழமாக இருந்ததால் பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தனியார் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரவு 11 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று 2-வது நாளாகவும் குப்பைகள் பற்றி எரிகின்றன. இதையடுத்து அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர்.
- விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள பாறைக்கு ழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கறுகையில், திருப்பூரை சுற்றியுள்ள வீரபாண்டி, வெள்ளியங்காடு, போயம்பாளையம், சுகுமார் நகர், பாரப்பாளையம், பாப்பநாயக்க ன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் இந்த பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர். குளிர்ச்சி யான நீரைக் கண்டதும் குளிக்க வேண்டும் என்ற ஆசையில், விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களும் பாறைக்குழிகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கி றார்கள். பாறை குழிகளுக்கு துணி துவைக்கச் செல்லும் பெண்களும் சில நேரங்களில் தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகின்றனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மற்றும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்வதால் சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடை களும் தாகம் தணிக்கச் சென்று அதில் விழுந்து சிக்கிக் கொள்கின்றன. திருப்பூரை சுற்றியுள்ள பாறைக்குழி களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாறை குழிகளு க்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். அல்லது முழுமையாக குழிகளை மூடி விட நடவடிக்கை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மேலும் பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகராட்சி பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அளவிலான பாறைக்குழிகள் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழையால் தண்ணீர் தேங்குவதால் நீரோடை போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விட இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் சென்று குளிக்கிறார்கள். எளிதாக பாறைக்குழிகளில் ஆபத்தில் சிக்கிக்கொள்வார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாறைக்குழிகளை கணக்கெடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பாறைக்குழிகள் குறித்து அந்தந்த பகுதி மக்கள் புகார் அளித்தால் அது பற்றி மேயரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியே வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
- தங்கவேலுக்கு கண்பாா்வை குறைபாடு மற்றும் உடல்நலக்குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.
- மங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மங்கலம் :
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள கிடாத்துறைப்புதூரை சோ்ந்தவா் தங்கவேல் ( வயது 80). இவருக்கு கண்பாா்வை குறைபாடு மற்றும் உடல்நலக்குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கவேல் அதன் பின் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, உறவினா்கள் தேடியபோது அந்தப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் தங்கவேல் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் தங்கவேல் பாறைக்குழியில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- பாறைகுழியில் மீன்பிடித்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
- கால் தடுமாறி பாறைக்குழிக்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
வெள்ளகோவில் :
கரூர் மாவட்டம், ஆரியூர், சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குப்புசாமி (வயது 24). இவரது மனைவி மஞ்சுளா தேவி (25).இருவரும் நேற்று ஆரியூரில் இருந்து வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக பைக்கில் வந்துவிட்டு நேற்று மதியம் ஊருக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் உள்ள பாறைக்குழி அருகே நின்று தனது மனைவியை இறக்கிவிட்டு பாறை குழியில் மீன்பிடித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது கால் தடுமாறி பாறைக்குழிக்குள் விழுந்து நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதை அறிந்த மனைவி மஞ்சுளாதேவி சத்தம் போட்டு உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது முழுமையாக நீரில் மூழ்கி விட்டார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து நீரில் மூழ்கி இறந்து கிடந்த குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன குப்புசாமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்