search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலசாபிஷேகம்"

    • இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
    • ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.

    மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

    நல்லெண்ணை:-

    இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.

    மஞ்சள் தூள்:-

    மங்களகரமான வாழ்க்கை தருகிறது.

    அரிசி மாவு:-

    நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.

    பஞ்சாமிர்தம்:-

    இது உடல் நலம் தருகிறது.

    தயிர்:-

    மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.

    பழ வகைகள்

    முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.

    இளநீர்:-

    மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    விபூதியும் சந்தனமும்:-

    மக்களுக்கு அருள் தருகிறது.

    கலசாபிஷேகம்:-

    அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

    மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

    திருவிழாக்கள்

    மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.

    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.

    தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    • கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும்.
    • ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலாக உள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆங்கில புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா காலங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ காலங்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். ஆண்டுதோறும் வரும் கார்த்திகை மாதம் மற்றும் தைப்பூச காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் தமிழகம் முழுவதும் இருந்து இங்கு வருவது வழக்கம். இதற்காக கார்த்திகை மாதம் தொடக்கம் முதல் தைப்பூசம் வரை பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடை திறந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

    இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். இதேபோல் தை பூச திருவிழாவும் நெருங்கி வருவதையொட்டி பழனி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிக்க தொடங்குவார்கள்.

    பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் பிள்ளையார்பட்டி கோவில் பகல் முழுவதும் நடை திறக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் என். கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சி.சுப்பிரமணியன்செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-

    பக்தர்கள் விரதம் தொடங்கும் காலங்களில் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்களின் பயணம் தாமதமின்றி தொடரவும், கூட்ட நெரிசல் இல்லாமல் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் இன்று முதல் கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை சாத்தப்படாமல் பகல் முழுவதும் கோவில் திறந்து இருக்கும். அதேபோல் கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதி மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அவ்வப்போது தீர்த்தமும் தலையில் தெளிக்கப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் உலக மக்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் 1008 கலசாபிஷேக விழா கடந்த 13-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சாந்தி ஹோமம், திரச ஹோமம், ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விழா தீர்த்தஸங்க்ரஹணம், மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 6-வது கால யாகபூஜைகள் வரை நடைபெற்றது.

    பூர்ணாகுதி, சதுர்லெக்ச ஜெபதசாம்ச ஹோமங்களும், 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படும் நிகழ்ச்சி தலைமை பிச்சைக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலித்தபடி கோவில் வடக்கு கோபுரம் நுழைவு வாயில் வழியாக சென்று மூலவருக்கு அபிஷேகம் தொடங்கியது.

    பின்னர் பிரகாரங்களில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் உற்சவர் கற்பகவிநாயகர், சண்டிகேசுவரர், அங்குச தேவருக்கும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 12.40 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் 3 மணி வரை நடைபெற்றது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அவ்வப்போது தீர்த்தமும் தலையில் தெளிக்கப்பட்டது.

    இந்த விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தர்மபுரம் மற்றும் துளாவூர் ஆதினம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள், கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ளது ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில்.
    • இன்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து உலக மக்கள் நோய், நோடியின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேக விழா கடந்த 13- ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைதொடர்ந்து சாந்தி ஹோமம், திரச ஹோமம், ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சி மற்றும் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விழா தீர்த்தஸங்க்ரஹணம் நிகழ்ச்சியும், மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் நடைபெற்றது.

    தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், மதியம் இரண்டாம் கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும், மாலை 3-வது கால யாகசாலை பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், இரவு 3-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், மதியம் 12 மணிக்கு 4-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜை மற்றும் சதுர்லெக்ச ஜெபமும், இரவு 8.30 மணிக்கு 5-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இன்று(செவ்வாய்க்கிழமை) 19-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-வது கால யாக பூஜைகளும், 11 மணிக்கு சதுர்லெக்ச ஜெபதசாம்ச ஹோமங்களும், 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • 17-ந்தேதி யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.
    • 19-ந்தேதி மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து உலக மக்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேக விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பிள்ளையார்பட்டி தலைமை குருக்களான பிச்சைகுருக்கள் தலைமையில் நேற்று காலை 9மணிக்கு சங்கல்பத்துடன் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை தொடங்கியது. தொடர்ந்து கோமாதா பூஜையுடன் மதியம் 12.45மணிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை சாந்தி ஹோமம், திரச ஹோமமும் மாலை 5.30மணிக்கு ரசோக்ன ஹோமம் நடக்கிறது. 15-ந்தேதி காலை 8.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி நிகழ்ச்சியுடன் யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேக விழா நடக்கிறது.

    16-ந்தேதி காலை 8.30மணிக்கு தீர்த்தஸங்க்ரகணம் நிகழ்ச்சியும், மாலை 4.30மணிக்கு மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு 8.30மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் தொடங்குகிறது.

    தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடக்கிறது. 17-ந்தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மதியம் 11.30 மணிக்கு 2-ம் கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை, மாலை 6 மணிக்கு 3-வது கால யாகசாலை பூஜை, இரவு 8.30 மணிக்கு 3-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. வருகிற 18-ந்தேதி காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை, மதியம் 12 மணிக்கு 4-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜை இரவு 8.30 மணிக்கு 5-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    வருகிற 19-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-வது கால யாக பூஜை, 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் 1008 கலசாபிஷேக யாகசாலை நிகழ்ச்சியின்போது திருமறை, திருமுறை பராயணங்களும், சிறப்பு நாதஸ்வர மேளம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா நாளை தொடங்கி 7 நாட்கள் வரை நடக்கிறது.
    • 15-ந்தேதி நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இதையடுத்து உலக மக்கள் நோய், நோடியின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி நாளை(புதன்கிழமை) 1,008 கலசாபிஷேக விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 7 நாட்கள் வரை நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளது.

    இதற்காக கோவிலின் கிழக்கு கோபுரம் எதிரே பிரமாண்ட முறையில் யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா நாளை காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 14-ந் தேதி காலை சாந்தி ஹோமம், திரச ஹோமமும் மாலை 5.30 மணிக்கு ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம் நடக்கிறது.

    15-ந்தேதி காலை 8.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. 16-ந்தேதி காலை 8.30 மணிக்கு தீர்த்தஸங்க்ரஹணம் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு 8.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் நடைபெறுகிறது. தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடக்கிறது.

    17-ந்தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 6 மணிக்கு 3-வது கால யாகசாலை பூஜைகளும், 19-ந்தேதி காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜைகளும் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி காலை 8.30மணிக்கு 6-வது கால யாக பூஜைகளும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மேலும் 1008 கலசாபிஷேக யாகசாலை நிகழ்ச்சியின் போது திருமறை, திருமுறை பராயணங்களும், சிறப்பு நாதஸ்வர மேளம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×