என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெளியுறவுத்துறை செயலாளர்"
- வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டார்.
- இவர் தற்போது தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக வினய் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ளது.
இந்நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஆக இருந்து வருகிறார்.
1989-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான இவர், ஜூலை 15-ம் தேதிமுதல் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
- இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார் வினய் மோகன் குவாத்ரா.
- அவரது பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் அடுத்த மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2024 அக்டோபர் 31-ம் தேதி வரை குவாத்ரா பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான வினய் மோகன் குவாத்ரா கடந்த 1988-ம் ஆண்டில் வெளியுறவுத்துறை பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார் வினய் மோகன் குவாத்ரா.
- அவரது பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக வினய் மோகன் கத்ரா கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2024 ஏப்ரல் 30-ம் தேதி வரை குவாத்ரா பணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான வினய் மோகன் குவாத்ரா, நேபாளத்துக்கான தலைமை தூதராக பணியாற்றி வந்தார்.
வினய் மோகன் குவாத்ரா கடந்த 1988-ம் ஆண்டில் வெளியுறவுத் துறை பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை.
- கோவை, மதுரை மற்றும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை செயலாளர் அவுசாஃப் சயீத், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்துப் பேசினார்.
பாஸ்போர்ட் மற்றும் குடியேற்ற சேவைகள், தமிழக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெளிநாட்டு ஆட்சேர்ப்பில் சட்டவிரோத ஏஜெண்ட்களை தடுப்பது, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம், அரபு நாடுகளிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அப்போது, விவாதிக்கப்பட்டது.
மேலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்திய தூதரகங்கள், குடியேற்றப் பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதற்கான ஆன்லைன் நடைமுறையான அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவுசாஃப் சயீத் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு கூடுதல் உதவி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை டாக்டர் அவுசாஃப் சயீத் பார்வையிட்டதுடன், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்