என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரிட்டன் தேர்தல்"
- காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
- கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.
அத்திட்டங்களில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "நான் முதல்வன் திட்டம்", "கலைஞர் கனவு இல்லம் திட்டம்" ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவ - மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உள்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.
'நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் என்ஜினீயரிங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த 3 திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான இறுதிச்சுற்றுக்கு ரிஷி சுனக் முன்னேறியுள்ளார்.
- 120 ஓட்டுகள் பெறுபவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க முடியும்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த 3 சுற்று தேர்தல்களில் 4 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 4வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த 2 சுற்று தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்து முன்னிலை வகித்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் 4-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதிலும் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். மொத்தமுள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவருக்கு அடுத்தபடியாக வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ்சுக்கு 71 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது.
120 ஓட்டுகள் பெறுபவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார். வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன.
இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
- பிரதமர் பதவிக்கான மூன்றாம் சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது.
- இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.
இதற்கிடையே, இரு சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் இங்கிலாந்து முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், மூன்றாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ரிஷி சுனக் உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வர்த்தக மந்திரி பென்னி மார்டன்ட் 88 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். கெமி படேனோக் 58 வாக்குகள் பெற்றுள்ளார்.
புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
- நேற்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெற்றது.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில், ரிஷி சுனக் உள்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2-வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 3-வது சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
- இன்று 2-ஆம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
- 2-ஆம் சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.
லண்டன்:
நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர்.
கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் 67 வாக்குகள், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் 50 வாக்குகள், முன்னாள் மந்திரி கெமி படனாக் 40 வாக்குகள், டாம் டுகெந்தாட் 38 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.
2ம் சுற்றுக்கு 30 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், நாதிம் சகாவி, ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் முறையே 25, 18 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தனர். இன்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும். புதிய பிரதமராக தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
- புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்பட 8 பேர் உள்ளனர்.
- எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லண்டன்:
பிரட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சி எம்.பி.க்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா விதி முறையை மீறி மது விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையில் சிக்கிய அவர், அரசாங்கத்தை திறமையுடன் நடத்தவில்லை என்று நிதி மந்திரியாக இருந்த ரிஷி சுனக் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
நெருக்கடி அதிகமானதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர். கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.
இங்கிலாந்து அரசமைப்பு சட்டப்படி ஆளும் கட்சி தலைவர்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க முடியும். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பதவியேற்க உள்ளார். தலைவர் தேர்தல் இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. அக்கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களிப்பாளர்கள். முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வந்து இறுதியில் 2 பேர் மட்டும் களத்தில் இருப்பார்கள்.
இறுதிச் சுற்று போட்டியிலும் இருவரில் ஒருவரை கட்சியின் 2 லட்சம் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அவரே கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
தற்போது களத்தில் உள்ள 8 பேரில் ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு எம்.பி.க்களில் அதிக ஆதரவு இருப்பதால் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
போட்டியில் இருந்து விலகிய கிராண்ட் ஷேப்ஸ், தனது ஆதரவை ரிஷி சுனக்குக்கு தெரிவித்துள்ளார். இதே போல் எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமரின் பெயர் வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அறி விக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்