என் மலர்
நீங்கள் தேடியது "பரோடா கிரிக்கெட் சங்கம்"
- பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.
சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தார்.
- இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ருமேலி தார் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த பெண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தார். அவர் நான்கு வருட அனுபவத்துடன் பிசிசிஐ லெவல் 2 சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக உள்ளார். 2003-ல் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் 2018-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் ஆடினார். 2009 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக இருந்தார்.
இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 961 ரன்களையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களையும் குவித்துள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகளில் 29.5 சராசரியுடன் 236 ரன்களை அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.