என் மலர்
நீங்கள் தேடியது "சந்திரமுகி2"
- வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
- இவர் தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
வடிவேலு
இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது நடிகர் வடிவேலு பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி -2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வடிவேலு -பி.வாசு
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுக்கும் பி.வாசுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் கோபமடைந்த இயக்குனர் பி.வாசு நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் சென்று விடலாம் என்று வடிவேலுவிடம் கூறியதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.
சந்திரமுகி 2
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை படக்குழுவுடன் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடிய வீடியோவை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சந்திரமுகி 2
இந்நிலையில், தற்போது நடிகை கங்கனா ரனாவத் 'சந்திரமுகி -2' படத்தில் தனது கதாபாத்திரத்தை இன்று முடிக்கவுள்ளதாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சந்திரமுகி படத்தில் இன்று நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்பட உடையில் தான் இருப்போம். அதனால் இன்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன்.
சந்திரமுகி 2
லாரன்ஸ் மாஸ்டரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார், ஆனால் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதர். உங்களின் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து முன் பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
- சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கவுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.
சந்திரமுகி 2
அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ரஜினி - ராகவா லாரன்ஸ்
இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.