search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னிமாா் கருப்பராயன் கோவில்"

    • 18-ந்தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • காப்புக்கட்டுதல், கோவில் சாட்டுதலும், காலை 9 மணி அளவில் பவானி கூடுதுறைக்கு தீா்த்தக்குடம் எடுத்தலும் நடைபெறுகிறது.

    அவினாசி :

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், புதுப்பாளையம் கிராமம் வலையபாளையத்தில் கன்னிமாா் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் சாட்டு விழா வருகிற 18-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

    இதையடுத்து, காப்புக்கட்டுதல், கோவில் சாட்டுதலும், காலை 9 மணி அளவில் பவானி கூடுதுறைக்கு தீா்த்தக்குடம் எடுத்தலும் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு படைக்கலம் எடுத்தல், விநாயகா் கோவிலில் இருந்து கோவிலுக்கு தீா்த்தக்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    ×