என் மலர்
நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிச்சாமி"
- அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என திண்டிவனத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
- தொண்டர்கள் உற்சாகமாக அதற்கான வேலையை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழுப்புரம்:
சென்னையில் இருந்து சேலம் செல்லும் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திண்டிவனம் வழியாக இன்று சேலம் சென்றார். அவருக்கு முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான சி.வி. சண்முகம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு திண்டிவனம் மேம்பாலம் கீழே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேடையில் வந்த எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:- அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது அதிமுக என்பது தி.மு.க. போல் வாரிசு அரசியல் செய்யும் கட்சி இல்லை. வருகிற எந்த தேர்தல் இருந்தாலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் தொண்டர்கள் உற்சாகமாக அதற்கான வேலையை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். அப்போது அர்ஜுனன் எம்.எல்.எ., திண்டிவனம் அ.தி.மு.க. நகர செயலாளர் தீனதயாளன்,மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.