என் மலர்
நீங்கள் தேடியது "பிரதாப்போத்தன்"
- தமிழ் சினிமாவில் முக்கிய கலைஞர்களுள் ஒருவர் பிரதாப் போத்தன்.
- இவர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப் போத்தன் (70) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன், பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
இதையடுத்து 1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார்.
பிரதாப் போத்தன்
மேலும், இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து பிரதாப் போத்தன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல், சந்தான பாரதி, பூர்ணிமா பாக்யராஜ், பிரபு, கனிகா, வெற்றிமாறன், சத்யராஜ் என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேரள அரசு சார்பிலும் பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதாப் போத்தன் உடலுக்கு பிரபு அஞ்சலி
இந்நிலையில், பிரதாப் போத்தன் உடல் இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து சென்னை, கீழ்ப்பாக்கம் வேலங்காடு மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் பிரதாப் போத்தன் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
கிறிஸ்துவ முறைப்படி உடல் அடக்கம் செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என பிரதாப் போத்தன் முன்னரே அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததால் அவரது விருப்பப்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.
- நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரதாப்போத்தன்.
- இவரின் உடலுக்கு நடிகர் கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப்போத்தன் (70 ) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் இளைமைக்கோலம், மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
பிரதாப்போத்தன்
1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்தஅறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார். ஜீவா, வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன் போன்ற படங்களை இயக்கிய இவர் ஆத்மா படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார்.
அதேசமயம் கதாசிரியர் சௌபா எழுதிய சீவலப்பேரி பாண்டி கதையை திரைப்படமாக எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மலையாளத்தில் இவர் இயக்கிய யாத்ரா மொழி படத்தில் சிவாஜி கணேசனும், மோகன்லாலும் சேர்ந்து நடித்தனர். சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி. இயக்கத்தில் காபி வித் காதல் படத்திற்காக கொடைக்கானல் சென்று வந்தார்.
நடிகர் பிரதாப்போத்தன் சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்தார். இதையடுத்து இன்று (15.07.2022) காலை சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வேலையாட்கள் வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் படுக்கையில் இருந்திருக்கிறார்.
இவரின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மறைந்த பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் - பிரதாப்போத்தன்
அதுமட்டுமல்லாமல், அவரது சமூக வலைதளப்பக்கத்தில்,"தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.