என் மலர்
முகப்பு » ஏஜென்ட்
நீங்கள் தேடியது "ஏஜென்ட்"
- இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி நடித்துள்ள படம் ஏஜென்ட்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஏஜென்ட்' . இந்த படத்தில் சாக்ஷி வைத்யா, மம்முட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ், சுரேந்தர் டூ சினிமா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ரசூல் எல்லோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு வக்கந்தம் வம்சி கதை எழுதியுள்ளார்.

ஏஜென்ட்
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை, தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனும் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர்.
அதே நேரத்தில் தெலுங்கில் அகிலும் மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியும் இதன் டீசரை வெளியிட்டனர். இப்படத்தின் இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
×
X