search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழிவாங்கும்"

    • தி.மு.க.வினரின் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    • அகதிகள் முகாம் கட்டுமானத்தை தடுத்த முன்னாள் கவுன்சிலர் ைகது

    கரூர்:

    கரூர் ராயனூரில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தோரணக்கல்பட்டியில் உள்ள மந்தை நிலத்தில் புதிதாக கட்டப்பட உள்ளது. இது கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்த பகுதியாகும். ஆட்சி மாற்றத்தால் பே ருந்து நிலையம் வருவது நின்றுப்போனது.

    இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட சமுதாய மக்களின் கோயில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரமாக மந்தை நிலங்கள் அமைந்துள்ளன என எதிர்ப்புத் தெரிவித்தும், மறுவாழ்வு முகாம் அமைக்கக்கூடாது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட் டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் தோரணக்கல்பட்டி, கொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கடந்த 1ம் தேதி கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தோரணக்கல்பட்டி பகுதியில் மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிக்காக பொக்லைன் மூலம் நேற்று முன்தினம் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த தடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாந்தோணிமலை போலீஸார் கரூர் நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ஏகாம்பரம், சணப்பிரட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் இள ங்கோவன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.

    மேலும் பாதுகாப்புக்காக தோரணக்கல்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர். சுக்காலியூரிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியினருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். 5 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸார் கூறியதை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அதன்பின் மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், கரூர் மாவட்ட எஸ்.பி. இ.சுந்தரவதனம் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து நிருபர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, தோரணக்கல்பட்டியில் புறம்போக்கு நிலம் 14.5 ஏக்கரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை முடக்கவேண்டும் என்பதற்காக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சணப்பிரட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் இளங்கோவன் தனது பட்டா நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் ஏகாம்பரம், சத்தியமூர்த்தி ஆகியோரும் வழக்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களை மிரட்டி விரட்டியுள்ளனர். நேற்று அதிகாலை வீடு புகுந்து 3 பேரையும் கைது செய்தனர். இது அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

    ×