search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலாதல சாலை"

    • அரசின் அனுமதி கிடைத்ததும் நிதி ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் உடனே துவங்கும் என்றனர்.
    • அத்துடன் சுற்றுலா வளர்ச்சி சிறப்பு திட்டம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.

    தாராபுரம்:

    தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மாநில அளவில் 40 இடங்களில் மாவட்ட சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் சுற்றுலா வளர்ச்சி சிறப்பு திட்டம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.சுற்றுலா துறையில் மண்டலம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் அறிக்கை கோரப்பட்டது. இதனால் தாராபுரத்தை மையமாக கொண்டு கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சுற்றுலா தலங்களை இணைக்கும் சாலைகள் 12 கி.மீ., தூரம் மேம்படுத்த ரூ.21.84 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகையில், அரசின் அனுமதி கிடைத்ததும் நிதி ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் உடனே துவங்கும் என்றனர்.

    ×