என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல.கணேசன்"

    • வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 21-வது கவர்னர் இல.கணேசன் ஆவார்.
    • முதல்-மந்திரி நெய்பியூரியோ, துணை முதல்-மந்திரி ஓய்.பட்டான், சபாநாயகர், மந்திரிகள், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    கோகிமா:

    14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக இருந்தார். அவர் நாகாலாந்து கவர்னராக மாற்றப்பட்டார். ஜெகதீஷ் முகிக்கு பதிலாக அவர் மாற்றப்பட்டார். ஜெகதீஷ் அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நாகாலாந்து மாநில கவர்னராக இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவுகாத்தி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    முதல்-மந்திரி நெய்பியூரியோ, துணை முதல்-மந்திரி ஓய்.பட்டான், சபாநாயகர், மந்திரிகள், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 21-வது கவர்னர் இல.கணேசன் ஆவார். அங்கு வருகிற 27ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    • நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
    • துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    அடுத்த மாதம் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×