என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலகேஸ்வரர் கோவில்"
- மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
- 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
நேற்று முதல் 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகவிழா இன்று நடைபெற்றது. அதன்படி நேற்று யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 4ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதற்கிடையே நேற்று அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வருகை தந்தார் .அவருக்கு கோவில் விழா குழுவினர் சார்பில் பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று 8ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 5.15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி, பெருசலங்கை ஆட்டம், பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
- நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், நாளை கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின.
யாக சாலை மண்டபத்தில் தானியங்கள் கொட்டப்பட்டும், கலசங்கள் தயார் செய்யப்பட்டும், யாகசாலை அலங்கரிக்கப்பட்டது. யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகபூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், 3ம் கால யாகபூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொங்கு நாட்டின் பாரம்பரியக் கலையான பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதனை கொங்கு பண்பாட்டு மையத்தினர் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மங்கை வள்ளிகும்மி குழுவினரின், கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., உலகேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவில் விழாகமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
- தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருகிற 8ந்தேதி கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று மாலை அல்லாளபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் ஊர்வலமாக வந்து யாக சாலைக்கு சென்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை நடத்தினர்.
தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- 8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
- மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
இதையொட்டி இன்று மாலை 3 மணி அளவில் அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த கலச ஊர்வலம், உலகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. அன்று காலை 5:15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. மேலும் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி,பெருசலங்கை ஆட்டம்,பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
- கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பல்லடம் :-
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகேஸ்வர சுவாமி, உண்ணாமலை அம்மன், மற்றும் கரிய காளியம்மனுக்கு 9 யாக குண்டம், இதர தெய்வங்களுக்கு 37 யாக குண்டங்கள் என மொத்தம், 46 யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கும்பாபிசேக் பணிகளை விழா கமிட்டியினரும், ஊர் பிரமுகர்களும், நேரில் பார்வையிட்டு ஆலோசனை கூறி வருகின்றனர்.
- அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த நிலையில் வரும் 8-9-2022 அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேக விழா நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் கும்பாபிசேகவிழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.இதற்கு மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்