என் மலர்
நீங்கள் தேடியது "பா. ரஞ்சித்"
- தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது.
- வெயில் திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வசந்தபாலன், "தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன். சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டிவிட கூடாது என்று பா. ரஞ்சித் அவரது படங்களின் வாயிலாக நமக்கு கடத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.
- கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கினார்
- வேட்டுவம் படத்தில் கெத்து தினேஷ், ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
இவர் கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வேட்டுவம் படக்குழுவினரை சந்தித்தது விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.
- பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது.
- ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஒரு தாய் திடீரென்று தன் குடும்பத்தை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியே செல்கிறார். மகன் எப்படி அவரை கண்டுபிடித்தார் என்பதே கதைக் களம்.
ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம். இப்படத்தில் ஹன்சிகா திகிலூட்டும் வேடத்தில் நடித்துள்ளார். சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு திகில் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷில்பா மஞ்சுனாத் அடுத்து சமூத்திரகனியுடன் சேர்ந்து சிங்கப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.
மேகனா இலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடிப்பில் நாளை வெளியாகும் படம் "அரிமாபட்டி சக்திவேல்". ரமேஷ் கந்தசாமி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பாடகர் மற்றும் இசையமைப்பாளார் ப்ரதீப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.
- உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ்.
- கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். 2018-ஆம் ஆண்டில் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.
பெரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். அப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்கவுள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கவுள்ளனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
"எனது 5-வது படத்தை நான் இயக்கவுள்ளேன் . மீண்டும் பா.ரஞ்சித் அண்ணாவுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
- 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதி சுற்று’ படத்தை இயக்கினார்
- சூர்யாவை நடிப்பில் ’புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதி சுற்று' படத்தை இயக்கினார் . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்த திரைப்படமாகும். ரித்திகா சிங் மிக சிறப்பான நடிப்பில் மக்கள் மனதை கவர்ந்தார். இதுவே ரித்திகா சிங் நடித்த முதல் படமாகும் .
அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தை இயக்கினார். மிகப் பெரிய திருப்பு முனையாக சுதா கொங்கராவுக்கு அமைந்தது இத்திரைப்படம். அப்படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு 'சர்ஃபிரா' என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
அதற்கு அடுத்து சூர்யாவை வைத்து 'புறநானூறு' படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்தாக துருவ் விக்ரமிற்கு கதையை கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. . இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது. துருவ் விக்ரம் மகான் திரைப்படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார். அத்திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரிதுள்ளார். அதீகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
- தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பா. ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.
கடந்த 20-ந்தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரது தோழிகளுடன் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தபோது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பா. ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி டிஎஸ்பியிடம் தென் தமிழக கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிப்பதாக பா. ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
- இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.\
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. திரைப்படம் பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டும், மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் சம்பந்தமாக எந்த அப்டேட்டுகளும் சமீப காலமாக வரவில்லை. இந்நிலையில் சீயான் விக்ரம் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வருகிறது. தலையில் முண்டாசுடன், மூக்குத்தி அணிந்தும் பார்க்கவே படும் பயங்கராமாக இருக்கிறார் விக்ரம். அப்புகைப்படத்திற்கு எக்ஸைட்டிங் டைம்ஸ் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.
பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முதலில் திரைப்படம் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர் ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை.
தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது இம்முறை சொன்ன தேதியில் வெளியாகும் என ரசிகர்களால் நம்பப் படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.
தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் " தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு முடிவடைந்தது, நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், தங்கலான் எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை, கூடிய விரைவில் ஒரு அசத்தலான டிரைலர் வர இருக்கிறது, இந்தியன் சினிமா மிகப் பெரிய படைப்பான தங்கலானை பார்க்க இருக்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
- முதன்முதலாக நான் படம் இயக்க நினைத்தது ‘வாழை’ படம். என்னை பாதித்த கதை இது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்பவர் மாரிசெல்வராஜ். தற்போது 'வாழை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த சிறுவர்கள் ஒரு சிலர் காயத்துடன் தப்பித்தனர். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அந்த லாரியில் சின்ன வயதில் மாரி செல்வராஜும் பயணித்து, அந்த விபத்திலிருந்து உயிர் தப்பினார். தன்னுடைய சிறு வயது வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தை அவரின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் திவ்யா மாரி செல்வராஜ், ஹாட்ஸ்டார் நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், ராம், தயாரிப்பாளர் தாணு, ரெட் ஜெயண்ட் செண்பக மூர்த்தி, தயாரிப்பாளர், நடிகர் ஜே.எஸ்.கே., இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்,நடிகர் கலையரசன், நடிகைகள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
முதன்முதலாக நான் படம் இயக்க நினைத்தது 'வாழை' படம். என்னை பாதித்த கதை இது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் இயக்கி கொண்டிருந்தபோதே என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படிதான் 'வாழை' படம் தொடங்கியது. பா.ரஞ்சித், தாணு ஆகியோருடன் அடுத்ததாக படங்கள் பண்ண இருக்கிறேன்.
நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் பட வேண்டும் என நடிகர்களிடம் வேலை வாங்கினேன். கலையரசன் 100 கிலோ, திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கி படத்துக்காக கடுமையாக உழைத்தனர். என் வாழ்க்கையில் மீள முடியாத துயரம் 'வாழை' படம்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டித் தொட்டி முதல் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு.
- சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி"
எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டித் தொட்டி முதல் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு. அதைத்தொடர்ந்த் பல படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
பாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது...
என்னைப்போல் திறமையானவர்களை அறிமுகப்படுத்தும் இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த ஆல்பத்திற்கு தம்பி அறிவு என்னை அழைத்தது மகிழ்ச்சி. இந்த ஆல்பம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது...
காஸ்ட்லெஸ் கலக்டிவ் செய்யும் போது தான் அறிவை முதல் முறை பார்த்தேன். கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம், அந்த வகையில் இயங்கும் அறிவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். காலாவில் மிக முக்கிய பாடலை எழுதினார். பல முக்கிய பாடல்களை எழுதியிருக்கிறார். அம்பேத்கருடைய சிந்தனைகள் எனக்கும் அவனுக்குமான நெருக்கமான சிந்தனையாக, உறவாக மாறியது. அம்பேத்கரிய சிந்தனைகளை எளிய வடிவமாக்கி எப்படி சந்தைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் அறிவு கொண்டு செல்லும் ராப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு அந்த அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்வதை நேரில் கண்டிருக்கிறேன். அது தான் அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. அது எளிதில் கிடைக்காது. உலகளவில் தனி இசைக் கலைஞர்கள் மிகப்பெரிய புகழ் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது இங்கு ஏன் நிகழவில்லை எனும் போது தான் அறிவின் பங்கு மிக முக்கியமானதாகிறது. அவர் மூலம், இப்போது பல கலைஞர்கள் வெளி வந்துள்ளனர். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் வெற்றியில் அவரது பாடல் வரிகள் மிக முக்கியமானது. ஆனால் அதன் பிரச்சனைகளில் சிக்கி வெளிவந்ததற்குப் பதிலடி தான் இந்த 12 பாடல்கள் என நினைக்கிறேன். என்னால் இசையமைக்கவும் முடியும் என நிரூபிக்கும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார். சோனி நிறுவனம் மூலம் இது மக்களிடம் சென்றடையும் என நம்புகிறேன். அறிவுக்கு இது முதல் படி தான். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர் இன்னும் உயரம் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.
தெருக்குரல் அறிவு பேசியதாவது...
நான் படிக்கும் காலத்தில் நான் கேட்ட குரல் ஆண்டனி தாசன் அண்ணன் குரல் தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வந்தது மகிழ்ச்சி. இண்டிபெண்டட் மியூசிக் உள்ளே நான் வரக் காரணமே காஸ்ட்லெஸ் கலக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது அந்த காஸ்ட்லெஸ் கலக்டிவ் தான், அதை உருவாக்கிய அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றி. வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு மிக முக்கியம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பல கஷ்டங்களைத் தாண்டி, இங்கு மீண்டும் வந்து வாழ்வை எதிர்கொண்ட வள்ளியம்மாயின் வரலாறு மிக முக்கியம் என் அடையாளம் அது தான். பொதுவாகப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இங்கே என் போல் வாழ்பவர்கள் எப்போது கொல்லப்படுவார்கள் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த உலகில் என்னை அடையாளப் படுத்தும் முயற்சியாகத் தான் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு முன் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். பல பாடல்கள் நம் ஆயாக்களிடம் இருந்து தான் வந்தது, ஆனால் அந்த அடையாளத்தை நாம் மறந்து விடுகிறோம். இந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டால் நாம் வேரற்ற மரமாக வெட்டி வீழ்த்தப்படுவோம். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது நான் பேசியது பிரச்சனையானது. உன் ஆயா பற்றி பாடவா வந்துள்ளாய் எனக் கேட்டபோது, ஆம் என் ஆயா பற்றிப் பாடத்தான் நான் வந்துள்ளேன் என்றேன். என் மீதான கேள்விகளுக்கான பதில் தான் இந்த ஆல்பம். நாம் வாழும் இன்றைய உலகில் அன்பை மீட்டெடுப்போம் நன்றி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்