search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் மயமாக்குதல்"

    • வங்கிகளை மத்திய அரசு தனியார்மயமாக்கினால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொது செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
    • வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதால் இலங்கையை போல் இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் தேசிய துணை செயலாளரும், மாநில பொது செயலாளருமான கிருபாகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வங்கி ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் மாநில பொது செயலாளர் கிருபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2 பொது துறை வங்கிகள் தனியார்மயமா க்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கண்டனத்துக்குரியது. வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதால் யாருக்கும் பயனில்லை. இதனால் விவசாய கடன், கல்விக்கடன் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காமல் போகும். தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பல்வேறு பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுடன் கடைசியாக வங்கிகளையும் தனியார் மயமாக்க முயற்சித்து வருகிறார்கள். தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியானால் இந்தியா முழுவதும் 9லட்சத்து 50ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதால் இலங்கையை போல் இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×