என் மலர்
நீங்கள் தேடியது "ஓடிடி தளம்"
- 'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
- இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது.
'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது. அதன் டிரைலர்கள் தொடக்க விழாவில் திரையிடப்பட்டன. விழாவில் சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் சமீப காலங்களில் தங்களது சினிமாக்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், "இன்றைக்கு இந்த இணையதள வளர்ச்சி, அனைத்தையுமே பார்த்து படிச்சு புரிஞ்சிக்கிற அளவிற்கு வந்துவிட்டது. இன்றைக்கு பெரும்பான்மையான பெற்றோருடைய கவலை, குழந்தைகளிடம் கொடுத்த போனை எப்படி திரும்ப வாங்குவது என்பதுதான். அப்பா, அம்மா, டீச்சர் என யார் சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான். ஆனால் கூகுள் சொன்னால் கேட்கிறான். இப்படி இருக்கும் சூழலில் இந்த இணையதளத்தின் மூலமாக கதைகள், அதன் மூலமாக கருத்துக்கள், நல்ல செய்திகள் சொல்ல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சினிமாவிற்கு புதிய வெளிச்சமாக இந்த ஓ.டி.டி இருக்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பத்தின் வழியாக தமிழ் கதைகள் மக்களை போய் சேர வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில், இப்போது தோன்றியுள்ள இந்த ஓடிடி, நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன்.
எங்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதோ அங்கு ஒரு புதிய வாசல் திறந்து கொண்டே இருக்கிறது. அதை காலமும் விஞ்ஞானமும் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஓ.டி.டி பிளஸ் நிறைய தமிழ் கலைஞர்கள், உலக மக்களோடு உரையாடுவதற்கும் தன் கலைகளை வழங்குவதற்கும் உதவும். சினிமா என்பது திரையரங்கிற்கான அனுபவம். இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சினிமாவுக்கான வெளியீட்டு விதி எப்போது வந்ததோ, அந்த விதியில், சிறு படங்கள், கடை படங்கள், பெண்களுக்கான படங்கள் பாதிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு கூட்டம் வரவேண்டும் என்ற நிலை இருக்கிறது. முதல் மூணு நாளில் காட்சிகள் நிறைய வேண்டும்.
அப்போது நட்சத்திர அந்தஸ்து இல்லாத திரைப்படங்களுக்கு நிச்சயம் கூட்டம் வராது. இந்த நிலையில் மக்களிடம் படம் பேசப்பட்டு, அவர்கள் திரையரங்கிற்கு வருவது வரைக்கும் படங்களை திரையரங்கில் தாங்கி பிடிக்க முடியாது. அப்போது மூணு நாள் கழித்து அதிக தியேட்டர் கிடைக்கும் போது அந்த வியாபார விரிவு தான் சிறிய படங்களுக்கான கதவுகளை அடைத்துவிட்டது. அப்படி அடைத்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்து வெளியில் வருவது தான் கலையுடைய வேலை. அப்படி நிராகரிக்கப்பட்ட படங்கள், இந்த ஓ.டி.டி.யின் வழியாக, தன் வாழ்க்கையை பணயம் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தரும் என நம்புகிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் நடனத்திற்காக பிரத்தியேகமாக "JOOPOP HOME" என்கிற இந்தியாவின் முதல் OTT தளத்தை துவங்கியுள்ளார்.
இதற்கான விழா வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓடிடி ஆப் அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், " ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப் நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்" என்றார்.
மேலும், டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009ல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
JOOPOP HOME என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும். நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்" என்றார்.
- ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
- புதுப்படங்கள் கூட தற்போது நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கொரோனா லாக்டவுன் சமயத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஒரே பிசினஸ் என்றால் அது ஓடிடி தளங்கள் மட்டும் தான். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு பொழுதைக்கழிக்க பெரிதும் உதவியாக இருந்தன இந்த ஓடிடி தளங்கள். தற்போது புதுப்படங்கள் கூட நேரடியாக இந்த ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் இருப்பதனால் மக்கள் விரும்பி பார்க்கும் தளமாகவும் நெட்பிலிக்ஸ் இருந்து வருகிறது. இருப்பினும் அந்நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பயனர்கள் தங்களின் பாஸ்வோர்டை பிறருக்கு பகிர்ந்து உதவ முடியாத படி பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அதிகரித்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடுத்த காலாண்டில் இதனை சரிசெய்ய மைரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அது அந்நிறுவனத்துக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.