என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி லட்டு"
- கடந்த மாதத்தில் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
- லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.
திருமலை
திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும்.
ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.
திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும்.
அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம்.
கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றை தயார் செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
- சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- சணல் பை பயன்படுத்தப்பட்டது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தை பெற்றுச்ெசல்ல கவுண்ட்டர்களுக்கு வரும் பக்தர்கள் முதலில் பாலித்தீன் கவர்களை விலை கொடுத்து வாங்கி, அதில் லட்டு பிரசாதங்களை வாங்கி எடுத்துச்சென்றனர்.
பாலித்தீன் கவர்களாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை தற்போது வரை அமலில் உள்ளது. இதனையடுத்து சணல் பை பயன்படுத்தப்பட்டது.
ஆனால் லட்டுகளில் உள்ள நெய்யை சணல் உறிஞ்சி விடுவதால் சுவை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின்னர் காகித அட்டைப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முயற்சியாக லட்டு பிரசாதத்துக்காக பனை ஓலைகளால் தயார் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளின் பயன்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
அதன்படி பக்தர்களுக்கு வினியோகிக்கும் லட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு அளவுகளில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வேளாண் விஞ்ஞானி விஜயராம் வழங்கினார்.
இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் பனை ஓலை பெட்டிகள், கூடைகள் விரைவில் லட்டு கவுண்ட்டர்களில் பயன்படுத்தப்படும் என்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்தார்.
- இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து இருக்கிறோம்.
இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் ஆந்திர மாநில விளைபொருள் விற்பனை துறை அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான விலையில் கொள்முதல் செய்ய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 2 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 3-ந்தேதி துவங்கி 16-ந்தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர்.
- 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தரிசனம் முடிந்து களைப்புடன் வரும் பக்தர்கள் லட்டு கவுண்டர்களிலும் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.
இதனை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலையில் வெளியே விற்பனை செய்து வருகின்றனர்.
லட்டு தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் லட்டுகளை அடுக்கி கன்வேயர் பெல்ட் மூலம் பிரசாத விற்பனை கவுண்டர் அருகே கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து தள்ளுவண்டிகள் மூலம் பிரசாத கவுண்டர்களுக்கு லட்டு எடுத்துச் செல்கின்றனர்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடையில் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் லட்டு எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்தனர்.
அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர். அவர்களை கையும் காளவுமாக பிடித்தனர்.
மேலும் அவர்கள் இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்திற்கு வயது 308 ஆகிறது.தற்போது லட்டு பிரசாதம் மூலம் ஆண்டுக்கு தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.
தற்போதைய நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுக்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.
மேலும் லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் வர்த்தக முத்திரையும் தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் பூந்தியாக வழங்க தொடங்கி பின்னர் லட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றுடன் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு 308 வயது ஆகிறது.
கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொண்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை பக்தர்களுக்கான மகா பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோவிலில் 3 வகையான லட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன.
அஸ்தானம் என்ற லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்யாண உற்சவ லட்டு கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே கடும் கிராக்கி உள்ளது. இதனால் கல்யாண உற்சவ லட்டை பெற பக்தர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கின்றனர்.
இதேபோல் புரோக்தம் என்ற லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் தினமும் அதிகமாக வழங்குகின்றனர். இதன் எடை 175 கிராம் இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் லட்டு எடை குறைவாக உள்ளது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5, ரூ.10, ரூ.25 விலைகளில் 3 வகையான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.50-க்கு லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் எடை குறைந்து கொண்டே வருகிறது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
- பிரபஞ்சசக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம்மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதி ரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன் சக்தி மிகுந்த கோவில் என்பதால் மன நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.
மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.
திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆனது என்ற கதைகள் உண்டு.
இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.
துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு கூட்டம்.
பெருமாளின் சிரித்த ஆனந்தமான பார்வை அனைவரையும் ஆனந்தபடுத்தும்.
அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.
நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.
- அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணி அனுபவம்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கான மாத ஊதியம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு கண்டிஷன். வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பதி லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம் தாமஸ் என்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பது தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிராகரித்துள்ளது. மேலும் பல நூற்றாண்டுகளாக ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் மிகச்சிறந்த தரத்துடன் தயாராகி வருவதாகவும், பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். பழங்காலத்திலிருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புனிதமான கடமைகளை செய்கிறார்கள்.
அவர்களில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் லட்டுகளை தயாரிக்கவும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
- நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்று இருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கி உள்ளது.
அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. தரமற்ற நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
- நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய் தரம், மணம், சுவையில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.
- தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் கட்டாயம்.
- லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம்.
திருப்பதியில் சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அன்லிமிடெட் லட்டு வழங்கப்படும். நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற கட்டணத்தில் பக்தர்கள் தேவைப்படும் லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு, ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும்.
பக்தர்களுக்கு அன்லிமிட்டட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டது" என்றார்.
முன்னதாக, தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.