search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பிரதமர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 225 இடங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது.
    • 159 இடங்களைக் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றியது

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிபெற்று அதிபரானார்.

    அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.

    இந்த நிலையில் 225 இடங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்தது.

    இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நடந்து வருகிறது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராக தற்போதைய தற்காலிக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக  பதவியேற்றுள்ளார். அதிபர் அனுரா குமார திசநாயகா முன்னிலையில் பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

    கடல்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். அதிபர் முன்னிலையில் அவருக்கு தமிழில் பதவிப்பிரமாணம் நடந்தது. இலங்கை வெளிவிவகார துறை அமைச்சராக விஜித் ஹேரத் பதவியேற்றார். மகளிர் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
    • நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.

    அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.

    இந்த நிலையில் 225 இடங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மூத்த செய்தி தொடர்பாளர் டில்வின் சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் திங்கட்கிழமை ஒரு மந்திரிசபையை நியமிப்போம். அதன் பலம் 25-க்கும் குறைவாக இருக்கும். பொது செலவை குறைக்க சிறிய அளவிலான மந்திரி சபையை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பரிந்துரைக்கிறது. அதே வேளையில் துணை மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். மந்திரிகளுக்கு துறைகளை ஒதுக்குவதில் அறிவியல்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்" என கூறினார்.

    இலங்கை அரசியலமைப்பின் 46-வது பிரிவின்படி, மொத்த கேபினட் மந்திரிகளின் எண்ணிக்கை 30 ஆகவும், துணை மந்திரிகளின் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்கும் எனவும், அப்போது அதிபர் திசநாயகா தனது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 225 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார்.
    • இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று அவர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    மேலும் எரிசக்தி துறையில் இந்தியாவின் அதிக முதலீடுகள், திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், ரெயில்வே மற்றும் பிற துறைகளில் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.

    • பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
    • இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

    கொழும்பு:

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் முடிவில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை முன் வைத்துள்ளது.

    சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.
    • 73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்காக கடந்த மே மாதம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார்.

    பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர் கோத்த பய ராஜபக்சே இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார், தற்போது அவர் சிங்கப்பூரில் தங்கி உள்ளார். மேலும் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என அவர் ஆலோசனை நடத்தினார் .

    இதில் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனவை நியமிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையடுத்து இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர். இவர் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். புதிய பிரதமருக்கு அக்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    ×