என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்வே அமைச்சர்"
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடைகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள "சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப்" என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் முனையத்தின் வீடியோவை ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று வெளியிட்டார்.
இந்த முனையம் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட ரெயில்வே அமைச்சர்,"இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலுக்கான முனையம். சபர்மதி மல்டிமாடல் போக்குவரத்து மையம், அகமதாபாத்," என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வெளியானதில் இருந்து 565,000க்கும் அதிகமான பார்வைகளையும் 20,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.
மேலும், குஜராத்தில் உள்ள பிலிமோரா மற்றும் சூரத் இடையேயான 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடையும் என்று ரெயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.
- பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
- ரெயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
நேற்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் ரெயில்வே துறை அமைச்சராக மீண்டும் அஷ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம், ரிசர்வ் இருக்கைகளில் ரிசர்வ் செய்யாத பயணிகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கடும் விமர்சனத்திற்கு உள்ளான ரெயில்வே துறையை தனியாக கவனிக்கும் வகையில் அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ஆனால் மேலும் 2 துறைகளுடன் ரெயில்வேக்கு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஷ்வினி வைஷ்ணவுக்கு ரெயில்வே , தகவல் ஒலிபரப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஐடி ஆகிய 3 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரெயில் விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
- உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மோடி அரசில் ரெயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்-திப்ரூகர் ரெயில் விபத்து மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரெயில் விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உ.பி.யில் சண்டிகர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மோடி அரசு எப்படி முறையாக ரெயில் பாதுகாப்பை சீர்குலைத்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் இருக்கும்.
ஒரு மாதத்திற்கு முன்பு, சீல்டா-அகர்தலா கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நடக்கக் காத்திருந்ததாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
தானியங்கி சமிக்ஞையின் தோல்வி, செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பல நிலைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் லோகோ பைலட் மற்றும் ரெயில் மேலாளருடன் வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவை ஆய்வு அறிக்கையில் மோதலுக்கு சில காரணங்களாகும்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ரயில்வே அமைச்சர், சுய-விளம்பரத்திற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்.
எங்களின் ஒரே கோரிக்கை:
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் கவாச் எதிர்ப்பு மோதல் அமைப்பு விரைவாக நிறுவப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
2024-2025 நிதியாண்டில் வழக்கமான ரெயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரெயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.
கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கணக்குத் தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும்.
அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும். அந்த வகையில், விழுப்புரம்-திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரெயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அப்பணிகளின் விவரங்களை விவரித்துள்ளார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம்.
சென்னை:
தமிழக ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கேள்விகள் எழுப்பி நேற்று கடிதம் எழுதினார். அதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தனது எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வெளியிட்ட பதிவு வருமாறு:-
தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டிற்கு 2 அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்படும்.
- போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும்தான் துவைக்கப்படுமா என காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார்.
ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா, "ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் படுக்கை, கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுமா?" என மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படும். பெட்களில் ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் கம்பளியும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்று ரெயில்வே துறைக்கு ஆங்கில நாளிதழ் ஒன்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருந்தது.
அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .
- தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
- முற்றிலும் முரணான தகவலை மத்திய ரயில்வே அமைச்சரே வெளியிடலாமா?
- இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய ரெயில்வே அமைச்சர் 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு செய்து ரெயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் (மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி) கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் (போக்குவரத்துத் துறை) அரசாணை (நிலை) எண்.7, நாள் 24.01.2022, அரசாணை (நிலை) எண்.65, நாள் 25.04.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்.134, நாள் 22.09.2023 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய ரெயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஒன்றிய ரெயில்வே அமைச்சரை கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு மத்திய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024, மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக ரெயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை. அந்தக் கடித விவரங்களாவது மத்திய ரயில்வே துறை மந்திரிக்குத் தெரியுமா?
மேலும், 12.12.2024 நாளிட்ட அரசுக் கடிதம் மூலம் தென்னக ரெயில்வே, பொது மேலாளரிடம் தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கை கேட்டுக்கொள்ளப்பட்டது. இது குறித்து தென்னக ரெயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது கடித நாள் 19.12.2024ல் "மதுரை – தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான் – மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது" என்றும் "மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக ரெயில்வேயால் இக்கருத்துரு குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக" தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தினை கைவிடக்கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை, மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா? தமிழ்நாட்டின் திட்டம் என்றாலே ஓரவஞ்சனையுடன் பார்த்து, புறக்கணிக்கும் மனப்பான்மையில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசின் எண்ணவோட்டம் தமிழ்நாடு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா?
ஆகவே முதலமைச்சரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென ஒன்றிய ரெயில்வே துறை மந்திரியைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
- அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்து.
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரெயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
அப்போது அவர், "அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை.
இருப்பினும் 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது 2000 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும், ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரெயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. தோராயமாக மொத்தம் 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன " என்றார்.