என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேசிய விருதுகள்"
- தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்தி வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் என பலதரப்பட்டோர் கூறி வந்தனர்.
தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து காட்டாமாக கருத்து தெரிவித்துள்ளார்.
the ones who support murder of our Mahathma.. the ones who want to change Babasahebs Constitution.. will they CELEBRATE #JaiBhim ??? #justasking pic.twitter.com/QmTdI7EGPY
— Prakash Raj (@prakashraaj) August 26, 2023
இது குறித்த எக்ஸ் பதிவில், "காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், பாபாசாஹேப் இயற்றிய சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள்," என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார்.
- ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Congratulations to all the #NationalFilmAwards2023 #kashmir files for being judged as a worst film of the decade.
— pcsreeramISC (@pcsreeram) August 25, 2023
மேலும் பலர், இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய விருது வென்றவர்களுக்கு நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான படமாக காஷ்மீர் ஃபைல்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேசிய விருது பெறும் தேசிய விருதுகள் படங்களின் பட்டியல் இன்று வெளியானது.
- தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தட் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய விருது பெறும் தேசிய விருதுகள் படங்களின் பட்டியல் இன்று வெளியானது.
இதில், தேசிய விருதுகள் பெற்ற திரைத்துறை கலைஞர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, "மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
69வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! நடிகர் விஜய் சேதுபடி, இயக்குனர் மணிகண்டன், நல்லாண்டி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
மேலும், இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள
ஷ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- தேசிய திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.
- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 விருதும், மண்டேலா படத்துக்கு 2 விருதும் கிடைத்தது.
சென்னை:
68-வது தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற அனைத்து விருதாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியதாவது:
அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சமூக பொறுப்புணர்வு மிகுந்த படைப்புகள் திரையை ஆளட்டும்.
68-வது தேசிய திரைப்பட விருதுகளை குவித்து தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்த்த நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.
சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்