search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி ஜவுளி பூங்கா"

    • மினி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் ஏற்கனவே உள்ளது.
    • எல்லாவகையிலும் தன்னிறைவு பெற்று இயங்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குழுவாக இணைந்து, அரசு மானியத்துடன் மினி ஜவுளி பூங்காக்கள் அமைத்து இயக்க வேண்டுமென ஏற்றுமதியாளர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

    இது குறித்து ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    மினி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் ஏற்கனவே உள்ளது. ஆனாலும், தொழில்முனைவோர் மத்தியில் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசு தற்போது, இந்த திட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அமைவதை ஊக்கப்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் ஜவுளி உற்பத்தி துறையை பரவச்செய்ய அரசு விரும்புகிறது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் குழுவாக இணைந்து புறநகர் பகுதிகள், ஈரோடு, திண்டுக்கல் போன்ற அருகாமை மாவட்டங்களில் மினி ஜவுளி பூங்காக்களை உருவாக்கவேண்டும். விரிவாக்கம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளித்துறையில் புதிதாக கால்பதிக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் கைகொடுக்கும்.அரசு 2.50 கோடி ரூபாய் மானியம் வழங்குவதால் நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும். அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் எல்லாவகையிலும் தன்னிறைவு பெற்று இயங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×