என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏற்றுமதியாளர்கள்"
- உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளா்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
- கண்காட்சியில் உலகின் 1,300 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் திருப்பூரின் வளங்குன்றா பின்னலாடை உற்பத்தி முறைகள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.
இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வளங்குன்றா உற்பத்தி கோட்பாடுகளை துரிதமாக அமல்படுத்த ஐரோப்பிய, அமெரிக்க உள்ளிட்ட வளா்ந்த பொருளாதார நாடுகள் பெரும் முனைப்புகளை முன்னெடுத்துள்ளன. இதன் மூலமாக வரும் 2030- ம் ஆண்டுக்குகள் இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களில் 50 சதவீதம் வளங்குன்றா வளா்ச்சிக் கோட்பாட்டினின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையை கருத்தில் கொண்டு திருப்பூா் பின்னலாடை உற்பத்தியின் பின்னணியில் உள்ள பல்வேறு வளங்குன்றா உற்பத்திக் கோட்பாடுகள் குறித்த விவரங்களை உலக அளவில் எடுத்து செல்லும் விதமாக பல்வேறு முயற்சிகளை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூட்டமைப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக உறுப்பினராக சோ்ந்தது.
இந்த அமைப்பு கடந்த 21 ஆண்டுகளாக சூழலியல் பாதிக்காத உற்பத்தி குறித்தான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளா்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வோா் ஆண்டும் ஏதாவது ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நகரங்களில் 5 நாள் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சியினை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லண்டன் நகரில் கடந்த அக்டோபா் 22 ந் தேதி முதல் 26 ந் தேதி வரையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. எனது அறிவுறுத்தலின்பேரில் இந்த கருத்தரங்கில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் என்.திருகுமரன், இணைச்செயலாளா் குமாா் துரைசாமி ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.
இந்த இருவரும் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூட்டமைப்பு நிபுணா்களுடன் திருப்பூரின் வளங்குன்றா உற்பத்தி முறைகள் குறித்து எடுத்துக்கூறி அதற்கான ஆவணங்களையும் சமா்ப்பித்தனா். அதிலும் குறிப்பாக பூஜ்ய முறை சாயக்கழிவு நீா் சுத்திகரிப்பு, காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி, திருப்பூரில் 8 ஆண்டுகளில் 17 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், மழைநீா் சேகரிப்பு, கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் மறு சுழற்சி, துணிக்கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரித்தல், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் நெகிழி மற்றும் இதர அக்சஸரிஸ், குளங்களை தூா்வாரி பராமரித்தல், கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக பங்களிப்பில் திருப்பூா் தொழில் சமூகத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தனா்.இந்த கண்காட்சியில் உலகின் 1,300 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்றுமதியாளா்கள் சங்கம் இந்தத் துறையில் உள்ள நிபுணா்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறது.
- நீா் நிலைகளை பாதுகாத்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்தல்.
திருப்பூர்
உலகின் முன்னணி வா்த்தகா்கள் நிலைத் தன்மை குறித்து அதிகம் விவாதித்து வருகின்றனா். ஐரோப்பிய ஒன்றியத்தின் காா்பன் பாா்டா் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிஷம் ஒழுங்குமுறையை செயல்படுத்துவது எதிா்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் இருந்துவிடுபடவும், நிலைத் தன்மைக்கான உறுதிப்பட்டை அடையவும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் இந்தத் துறையில் உள்ள நிபுணா்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமையிலான நிா்வாகிகள் இன்டா்டெக் டெஸ்டிங் சா்வீஸஸ் நிறுவனத்தின் குளோபல் தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரே லாக்ரோயிக்ஸை கோவையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் திருப்பூா் பின்னலாடை நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சாய ஆலைகளில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு தொழில் நுட்பம், குறைந்த காா்பன் தடத்தை உருவாக்க காற்று மற்றும் சூரிய சக்தி ஜெனரேட்டா்களை நிறுவுதல், மரங்களை நடுதல், நீா் நிலைகளை பாதுகாத்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்தல் குறித்தும் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.
மேலும் திருப்பூரில் காா்பன் சமநிலை குறித்து இன்டா்டெக் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், துணைத் தலைவா் இளங்கோவன் மற்றும் முன்னணி ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றனா்.
- தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது.
- மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.
திருப்பூர் :
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கும் வகையில் யங் டீ அமைப்பு சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காபி வித் எக்ஸ்பெர்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களை அழைத்து வந்து ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான, ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.
தலைமுறை இடைவெளி, குடும்ப தொழில் தொடர்பான புரிதல், சிக்கல் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகள் குறித்து வாழ்வியல் பயிற்சியாளர் பேச இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
- இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் ஜூலை 11ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது.
- கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக திருப்பூருக்கு இத்தாலி ஆர்டர் அதிகரிக்கும்.
திருப்பூர் :
ரெடி டூ ேஷா என்ற சர்வதேச ஜவுளி கண்காட்சி இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் ஜூலை 11ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், விளையாட்டு ஆடைகள், உள்ளாடைகள், நீச்சல் ஆடைகள், தோல் ஆடைகள், பின்னலாடைகள், கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
ஐரோப்பிய நாடுகளுக்கான முக்கிய ஆயத்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.
கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக திருப்பூருக்கு இத்தாலி ஆர்டர் அதிகரிக்கும். குறிப்பாக பருத்தி ஆடைகளுடன் செயற்கை நூலிழை ஆடை வர்த்தகம் தொடர்பான விசாரணையும் நடக்கும். எனவே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இத்தாலி கண்காட்சியில் பங்கேற்க முன்வரலாம் என ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில்,இத்தாலியில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்பதால் திருப்பூருக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும். கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் என்றனர்.
- மினி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் ஏற்கனவே உள்ளது.
- எல்லாவகையிலும் தன்னிறைவு பெற்று இயங்க முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குழுவாக இணைந்து, அரசு மானியத்துடன் மினி ஜவுளி பூங்காக்கள் அமைத்து இயக்க வேண்டுமென ஏற்றுமதியாளர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-
மினி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் ஏற்கனவே உள்ளது. ஆனாலும், தொழில்முனைவோர் மத்தியில் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசு தற்போது, இந்த திட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அமைவதை ஊக்கப்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் ஜவுளி உற்பத்தி துறையை பரவச்செய்ய அரசு விரும்புகிறது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் குழுவாக இணைந்து புறநகர் பகுதிகள், ஈரோடு, திண்டுக்கல் போன்ற அருகாமை மாவட்டங்களில் மினி ஜவுளி பூங்காக்களை உருவாக்கவேண்டும். விரிவாக்கம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளித்துறையில் புதிதாக கால்பதிக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் கைகொடுக்கும்.அரசு 2.50 கோடி ரூபாய் மானியம் வழங்குவதால் நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும். அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் எல்லாவகையிலும் தன்னிறைவு பெற்று இயங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்