என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்வே ஊழியர்கள் கைது"
- ரெயில் நிலையத்தின் 8-வது மற்றம் 9-வது பிளாட்பாரம் ஓரத்தில் உள்ள குடிசையில் வைத்து சதீஷ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பெண்ணை கற்பழித்துள்ளனர்.
- அதிகாலை 3.27 மணியளவில் அந்த பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
புதுடெல்லி:
அரியானா மாநிலம் பரீதாபாத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
ரெயில்வேயில் பணிபுரியும் சதீஷ்குமார் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்து இருந்தார்.
நேற்று முன்தினம் சதீஷ் குமார் தனது மகனின் பிறந்தநாளுக்கு அந்த பெண்ணை அழைத்தார். அவரும் கீர்த்தி நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இரவு 10.30 மணியளவில் சதீசை சந்தித்தார். அவரை அழைத்துக் கொண்டு டெல்லி ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
ரெயில் நிலையத்தின் 8-வது மற்றம் 9-வது பிளாட்பாரம் ஓரத்தில் உள்ள குடிசையில் வைத்து சதீஷ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். அதிகாலை 3.27 மணியளவில் அந்த பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் (வயது35), வினோத்குமார்(38), மங்கள் சந்த் (33) ஜெகதீஷ் சந்த்(37) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த 4 பேரும் ரெயில்வேயில் மின்துறையில் பணிபுரிபவர்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி ரெயில் நிலையத்தில் ஊழியர்களால் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.