என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உணவு பொருள் விலை உயர்வு"
- உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்டவை மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
- இந்தியா தற்போது உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி உள்ளது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அரிசி உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகின்றன.
இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், பாரதிய விவசாயிகள் சங்கம் நடத்திய சர்வதேச விவசாய மாநாட்டில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே கூறியுள்ளதாவது:
உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவை அடிப்படைத் தேவைகள் என்பதால் அவை அனைத்தும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர், அதனால் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். பணவீக்கத்திற்கும் உணவுப் பொருட்களின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
கடந்த 75 ஆண்டுகளில்,விவசாயத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பெருமைக்குரியது. இந்தியா உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவை விவசாயத்தில் தன்னிறைவாக மாற்றியதற்காக அனைத்து அரசுகளும் பாராட்டுக்குரியது.
விவசாயிகளின் அந்தஸ்தை உயர்த்த வேண்டியது அவசியம். அரசு விழாக்களில் கூட வழக்கறிஞர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் அழைக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் விவசாயிகளை யாரும் அழைப்பதில்லை.
விவசாயத்தை கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற ஒரு இயக்கம் தேவை. இது கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேகமாக மக்கள் இடம் பெயர்வதைத் தடுக்கவும் உதவும்.
விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானம் இல்லை, அவர்களின் வாழ்வாதாரம் மழை போன்ற பல வெளிப்புற காரணிகளைச் சார்ந்தே உள்ளது. விவசாய பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற சவால்களும் அவர்களுக்கு உள்ளன.
விவசாய மாணவர்கள் இந்தியாவின் சிறந்த பாரம்பரிய விவசாய முறைளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்