என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிஎன்பிஎஸ்சி குரூப் 4"
- குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மாதம் 11ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.
இதற்கு 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தற்போது கூடுதலாக 2208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932-ஆக அதிகரித்துள்ளது.
- சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
- தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட முயன்றனர்.
சென்னை:
அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 குரூப்-4 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மொத்தம் 131 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 639 மையங்களில் நடந்தது. சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத வந்ததால் அவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாநகரம், நகர்ப்புறங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் 2500 பஸ்கள் இயக்கப்படும். இன்று 3 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்கள் வழியாக சென்ற அனைத்து பஸ்களும் அந்த பகுதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தேர்வு எழுத வந்தவர்களுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் முன்கூட்டியே தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு 9 மணிக்கு தொடங்கும். ஆனால் 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தார்கள் அவர்களை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பொன்னேரியில் உள்ள உலக நாதன் கல்லூரி, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, பாரத் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் பள்ளிஆகிய மையங்களில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டி விட்டனர்.
சென்னை புதுக்கல்லூரி, நீலாங்கரையிலும் தாமதமாக வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தேர்வு எழுத முடியவில்லையே என்ற தவிப்புடன் சென்றனர்.
காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை தேர்வு நடந்தது. முன்கூட்டியே தேர்வை எழுதி முடித்தவர்களும், 12.30 மணிக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
தேர்வு எழுதி முடித்த பிறகு ஓ.எம்.ஆர். தாளில் இடது கை பெருவிரல் ரேகையை ஒவ்வொரு வரும் பதிவு செய்தனர்.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க 7689 மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
7689 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் 1,10,150 கண்காணிப்பாளர்கள் 534 பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.
- சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் குரூப்4 தேர்வு நடைபெறுகிறது.
- தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் பறக்கும் படையினர் கண்காணிப்பு
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு, 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
- தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு, 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்படி, தேர்வு மையங்களின் எண்ணிக்கை ஏற்ப இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்