என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திடீர் மறியல்"
- பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
- போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.
இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.
பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை
அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.
பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
- அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலணியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் புறம்போக்கு இடம் உள்ளது. அதில் தனிநபர் ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கோவிலை சுற்றி வேலி அமைத்தனர். இந்த வேலியை தனி நபர் அகற்றி உள்ளார். இதனால் ஆத்திரம் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு செய்யாறு -ஆற்காடு சாலையில் வேலியை அகற்றியவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக அந்த தெருவில் இருந்த குடிநீர் குழாயும் அகற்றப்பட்டது.
ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆத்தூர்-ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு பொதுமக்கள் மறியல் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ஆத்தூர் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றதை அடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
- கோமுட்டி குளத்தை சுத்தம் செய்யாததால் ஆத்திரம்
- அண்டாவில் சாமி தீர்த்தவாரி நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற உள்ள நிலையில் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் சுவாமி ஊர்வலமாக சென்று கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடைபெறுவதற்காக சென்றபோது குளம் முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசியது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வந்தவாசி திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில் குளத்தை சுத்தம் செய்யாததால் கோவில் பட்டாச்சா ரியார்கள் சிறிய அண்டாவில் வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யும் அவலம் ஏற்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறிய அண்டாவை வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- பழமையான நீர்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் சுமார் 30 ஆண்டு பழமையான நீர்தேக்க தொட்டியினை அகற்றுமாறு பாஜக கட்சி சார்பில் நேற்று 10- க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
அப்போது அரசு அதிகாரிகளை கண்டித்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும், சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து அடைத்தும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அணைவரும் கலைந்து செல்லுமாறு அறியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து போக்குவரத்துக்கு வழிவிடாமல் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக அணைக்கட்டு தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கவுதம் உட்பட சாலை மறியலில் ஈடுப்பட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பணி சரிவர வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வந்தவாசி-ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி சரிவர வழங்கப்படுவதில்லை. எங்கள் ஊராட்சி செயலரும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
இதுகுறித்து புகார் தெரிவித்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சரிவர பணி வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் சமரசம் செய்ததின்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திட்டக்குடி அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வந்தவர்கள் திடீர் மறியல் நடந்தது.
- ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்து விட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே கிரீன்பார்க் தனியார் பள்ளியில் டி.என். பி. எஸ்.சி. குரூப் 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்வு எழுத வந்தவர்கள் காலதாமதம் எனக் கூறி 10-க்கும் மேற்பட்டோரை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த மாண–வர்கள் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை–மறியலில் ஈடுபட்ட–னர்.
தகவலறிந்து வந்த திட்ட–க்குடி டி.எஸ்பி. அசோகன் மற்றும் ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்ததுவிட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்கள் அனைவரும் கோபத்துடன் திரும்பி சென்றனர். இதில் சிலர் கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்