என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை சம்மன்"
- அமலாக்கத்துறை பா.ஜனதாவின் கைத்தடியாக, ஒரு அங்கமாக மாறியதை இந்த சம்பவம் காட்டுகிறது.
- தமிழகத்தின் ஏழை விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தை காப்பாற்றவும் நிதி மந்திரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கமிஷனரகத்தில் துணை கமிஷனராக பதவி வகிப்பவர் பா.பாலமுருகன். ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஏழை விவசாயிகள் கண்ணையன் (வயது 72), கிருஷ்ணன் (67) சேலம் மாவட்டம் ஆத்தூரில்6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள்.
நிலத்தகராறு தொடர்பான சட்டப்பூர்வ மோதலில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ரித்தேஷ்குமார் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி சம்மன் அனுப்பி உள்ளார். அதில் இந்த விவசாயிகளின் சாதியை குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்மனின்படி ரித்தேஷ் குமார் பண மோசடி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்.
அமலாக்கத்துறை பா.ஜனதாவின் கைத்தடியாக, ஒரு அங்கமாக மாறியதை இந்த சம்பவம் (சம்மன் அனுப்பிய விவகாரம்) காட்டுகிறது. தமிழகத்தின் ஏழை விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தை காப்பாற்றவும் நிதி மந்திரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் இந்த புகார் கடிதத்தின் நகல்களை துணை கமிஷனர் பாலமுருகன் அனுப்பி வைத்துள்ளார்.
- ராகுல் காந்தியிடம் மொத்தம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
- கடந்த 21ந் தேதி சோனியா காந்தியிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் வாங்கியது. இதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. இதில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 21ந் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சோனியாகாந்தியுடன் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் நாளை (26-ந்தேதி) விசாரணை ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நாளை மத்திய அமலாக்க இயக்குநரக அலுவலத்தில் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகும்போது அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் சத்தியாகிரக போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் அகில இந்திய உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்