என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு தேடி மருத்துவம் திட்டம்"

    • வார்டு வாரியாக, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
    • மக்களுக்கு தெரியப்படுத்தினால், அதிக அளவு மக்கள் பயன் பெறுவர்.

    அவிநாசி:

    மக்களின் வசதியை கருத்தில் கொண்டு வீடு தேடி சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.அதன்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வார்டு வாரியாக, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

    இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இம்மருத்துவ முகாமில், கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் இத்தகைய மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    வேலைக்கு செல்வோர் சில நிமிடம் ஒதுக்கி மருத்துவ முகாமுக்கு சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்கின்றனர். குறிப்பாக வீடுகளில் உள்ள முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்முகாம் பயனளிக்கிறது.இத்தகைய முகாம்களில் வயது முதிர்ந்தவர்களையே அதிகம் பார்க்க முடிகிறது. இருப்பினும் இம்முகாம் நடத்தப்படுவது குறித்து, மக்களுக்கு தெரிவதில்லை.

    எனவே முகாம் நடக்கும் விவரம் குறித்து முன்கூட்டியே அந்தந்த வார்டு உறுப்பினர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினால், அதிக அளவு மக்கள் பயன் பெறுவர். எனவே அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×