என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குர்ணால் பாண்ட்யா"
- ஹர்திக், குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்த் சில நாட்களாக ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்த முடிந்த லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. 2 முதல் 4 இடங்கள் முறையே கொல்கத்தா, லக்னோ, சென்னை ஆகிய அணிகள் உள்ளன.
இந்த புள்ளி பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்தில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி 4-வது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் 5-வது போட்டியில் ஆர்சிபி அணியுடன் இன்று மோதுகிறது.
இந்த தொடர் தொடங்கியதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா குடும்பம் தொடர்பான ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
குர்ணால், ஹர்திக், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூ.1 கோடி வரை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப விகிதத்தையும் அதிகரித்து வைபவ் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
- 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.
லக்னோ:
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.
கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- சென்னை- லக்னோ அணியின் ஆட்டம் மழையால் கைவிட்டப்பட்டது.
- இதனால் இரு அணியினருக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக கேப்டனாக அறிமுகமான குர்ணல் பாண்டியா முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி சாதனை படைத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 19.2 ஓவரில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிட்டப்பட்டது. இதனால் இரு அணிக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக களமிறங்கிய குர்ணல் பாண்டியா வந்த வேகத்தில் கோல்டன் டக் முறையில் தீக்ஷனா பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த அஜிங்கியா ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்கரம், லக்னோவிற்கு எதிரான போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் ஜார்ஜஸ் அணியின் கேப்டனாக இருந்த விவிஎஸ் லட்சுமணன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனாக குர்ணால் பாண்ட்யா செயல்படுவார்.
- ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.
லக்னோ:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனாக குர்ணால் பாண்ட்யா செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார். அந்த போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை டு பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார். வலியால் துடித்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பின்னர், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தகக்து.
- இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது.
- இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம்.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை லக்னோ அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ 16 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி ஆல்-ரவுண்டர் குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி. பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார்.
லக்னோ 2-வது வெற்றியை (3 ஆட்டம்) பெற்றது. ஐதராபாத் தான் மோதிய இரண்டு ஆட்டத்திலும் தோற்றது. வெற்றி குறித்து லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம். அதில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதை முதல் 2 ஓவர்களிலேயே பார்த்தோம். பவர் பிளேயில் குர்ணால் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசுவார் என்று எனக்கு தெரியும். அது போலவே அவர் சிறப்பாக பந்து வீசினார்.
இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது. அதில் வெவ்வேறு சவால்கள் இருந்தன. அணியில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளையாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
குர்ணால் பாண்ட்யா கூறும்போது பந்து வீச்சு, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐதராபாத் அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன் இருந்ததால் என்னை முன்னதாகவே பந்து வீச அழைப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.
கிரிக்கெட்டில் இருந்து 5 மாதங்கள் ஓய்வு எடுத்து இருந்தேன். எனது திறமைகளை வளர்க்க உழைத்தேன்.
மும்பை அணியில் விளையாடியபோது 4-வது வரிசையில் களம் இறங்கினேன். எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்றார்.
- 2017-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்கள் மகனுக்கு கவிர் என்று பெயரிட்டுள்ளனர்.
- பாண்டியா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்தியா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கிரிக்கெட் வீரர் குர்ணால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பன்குரி ஷர்மாவுக்கு ஜூலை 24 அன்று ஆண் குழந்தை பிறந்தது. 2017-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்கள் மகனுக்கு கவிர் என்று பெயரிட்டுள்ளனர்.
சச்சின், விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பாண்டியா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்தப் பதிவு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்