search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரநிலையம்"

    • முறையான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது கொட்டக்குடி கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இவர்களது முக்கிய தொழில் விவசாயமாகும். இதனால் மலை கிரா மங்களில் தங்கி தோட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மருத்துவ வசதி இல்லாததால் குரங்கணி மற்றும் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் போக்குவரத்து வசதியும் இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அரசு துணை சுகா தார மையம் கட்டப்பட்டது.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் இங்கு பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் முைறயான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அணைக்கரைப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதாரநிலையம் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு துணை சுகாதா நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா நோய் தொற்று இருந்ததால், அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களை மீட்டெடுத்த துறை

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகும்.

    இதன்மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு, பொதுமக்களை பாதுகாத்து வருகிறார். இது தவிர, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பரிசோதனை மேற்கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் வழங்கியும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் நலனும் காக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புற–மக்களுக்கு பயனுள்ள வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 12 நடமாடும் மருத்துவமனைகள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. அணைக்கரைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையானதாகவும், பயனுள்ள வகையிலும் இங்கு நிரந்தர கட்டிடத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், யாதவா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மூலம், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சாரத் திருவிழா, சாதனைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    ×