search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம் கரன்"

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.
    • சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் விளாசினார்.

    சவுத்தம்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 19.2 ஓவர்களில் 151 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்னும் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அவர் சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் (4,4,6,6,6,4) எடுத்து முத்திரை பதித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஹெட் இடம் பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல் பின்வருமாறு:-

    ரிக்கி பாண்டிங் 30 ரன்கள் (நியூசிலாந்து) 2005

    ஆரோன் பிஞ்ச் / கிளென் மேக்ஸ்வெல் 30 (பாகிஸ்தான்) 2014

    டான் கிறிஸ்டியன் 30 (வங்கதேசம்) 2021

    மிட்செல் மார்ஷ் 30 (ஸ்காட்லாந்து) 2024

    டிராவிஸ் ஹெட் 30 (இங்கிலாந்து) 2024

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது.

    • அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது.
    • இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    முல்லான்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 9 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.

    முல்லான்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 25 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 18 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், சாம் கரண் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் 183 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் பஞ்சாப் அணி 9 ரன்னில் தோற்றது.

    அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), சசாங்சிங் 25 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பும்ரா, கோயட்சி தலா 3 விக்கெட்டும், மத்வால், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பஞ்சாப் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:-

    நாங்கள் நெருங்கி வந்து விட்டோம். அருகாமையில் வந்து தோற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய் விட்டது. அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம்.

    இவ்வாறு நெருக்கமாக வந்து தோற்றதால் எங்களுக்கு இதயம் நொறுங்கி விட்டது. இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். தோல்வியை தழுவினாலும் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சாம்கரண் கூறியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் 3-வது வெற்றியை பெற்றது.இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பாண்ட்யா கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த ஆட்டமாகும். ஒவ்வொரு வீரருக்கும் பதட்டம் ஏற்பட்டது. அசுதோசின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக போராடி இந்த வெற்றியை பெற்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன்.
    • ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார்.

    மெல்போர்ன்:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது.

    மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக இருந்தது.

    ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.

    பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.

    இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரே லியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன.

    இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:-

    உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன்.

    என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சாம்கரன் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டி20 போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • சாம் கரனை தோளில் தூக்கிய வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ×