என் மலர்
நீங்கள் தேடியது "கிஷான் திட்டம்"
- உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.
- உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசின் 'பிரதமர் மோடியின் கிஷான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பல்லடம் :
மத்திய அரசின், பி.எம்., கிஷான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
விவசாயிகள், தங்களது நிலத்தின் ஆவணங்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான்கார்டு, போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மெர்குரி ஆவணங்களை வேளாண் விரிவாக்கம் மைய அதிகாரிகளிடம் வழங்கி, சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே ஆவணங்களை விரைந்து வழங்கி பயன்பெறலாம் என பல்லடம் வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.