என் மலர்
நீங்கள் தேடியது "பிரசன்னா"
- எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
- கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயாகியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் மேற்கொண்டார். எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு சினேகா- பிரசன்னா தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார்.
- நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு பிரபல நடிகை சினேகா அவரது கணவர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர்கள் ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்தனர். தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார். பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்து தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு சக்தி அம்மா ஆசியளித்து, பிரசாதம் வழங்கினார். வேலூர் தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சினேகா-பிரசன்னா குடும்பத்தினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் குடும்பத்துடன் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சினேகா வந்த செய்தி அனைவருக்கும் பரவியதால் கோவில் முன்பாக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த சினேகா-பிரசன்னாவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக வழிஅனுப்பி வைத்தனர்.
- சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்
விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.
தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.
அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.
ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.
தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதிக் ரவிசந்திரன்அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து நடிகர் பிரசன்னா மனம் திறந்து அதைப்பற்றி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ' அன்புள்ள நண்பர்களே , இவ்வளவு நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் இப்பொழுது உண்மையாகியுள்ளது. ஆம் நான் தல அஜித் குமார் சார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கிறேன். மங்காத்தா திரைப்படம் வெளிவந்த நாட்களில் இருந்தே அஜித் சார் நடிக்கும் திரைப்படத்தில் நான் நடிக்கப்போகிறேன் என்ற வதந்தி பரவி வந்த நிலையில். தற்பொழுது அது உண்மையாகியுள்ளது.
இதை சாத்தியமாக்கிய கடவுள், அஜித் சார், சுரேஷ் சந்திரா சார், மைத்திரி மூவீஸ், ஆதிக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரைப்படம் தற்பொழுது ஸ்பெயினில் படமாக்கப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சினம்
இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் பிரசன்னா கூறியதாவது, "பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு அருண் விஜய் உதாரணமாக இருக்கிறார்.

பிரசன்னா
அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமாரவேலன்
இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது, "என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது.

சினம்
நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்" என்றார்.
- கண்ட நாள் முதல், சீனா தானா, மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரசன்னா.
- தற்போது பாலிவுட் திரையுலகில் அவர் களம் இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழில் 2002-ல் வெளியான 'பைவ் ஸ்டார்' படம் மூலம் அறிமுகமான பிரசன்னா அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், சீனா தானா, சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும், முரண், மாபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. திருட்டு பயலே 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரசன்னா
தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது துப்பறிவாளன் 2-ம் பாகம் படம் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் பிரசன்னாவுக்கு இந்தி வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியை சமூக வலைத்தலத்தில் பிரசன்னா பகிர்ந்திருந்தார். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து இந்தி வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசன்னாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் தனுஷ் தனது நாற்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் தனது நாற்பதாவது பிறந்த நாளை இன்று (28-07-2022) கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ்
இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, 'நானே வருவேன்', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாத்தி' படக்குழு இன்று டீசர் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday...🤩 bro don't kill me for sharing this. I kept it too long for just myself 🥰 pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022