search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவுநாள் நிகழ்ச்சி"

    உடுமலை : 

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். நினைவு நாளை ஒட்டி அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே .ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆலோசனைப்படி உடுமலை நகர அ.தி.மு.க. சார்பில் கபூர் கான் வீதி உழவர் சந்தை அருகில் உள்ள அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஹக்கீம் தலைமை தாங்கினார் . திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் , நாகராஜ், வேலுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தாமோதர சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் அலங்கரிக்கப்பட்ட உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க.சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க.சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க நகரச்செயலாளர் கல்லம்பாளையம் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் எம்.ஜி.ஆரின் அலங்கரிக்கப்பட்ட உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பானு பழனிசாமி,துரைக்கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராசன், தண்ணீர்பந்தல் நடராஜன், மிருதுளா நடராஜன், லட்சுமணன், ரமேஷ்,நாராயணன்,கந்தசாமி,வக்கீல் வெங்கடாஜலபதி, உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பணிக்கம்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சித்துராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அருள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
    • 1000பேர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் : 

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாநகர மாவட்டஅ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் , திருப்பூர் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் 1000பேர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் , மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்ட பொருளாளர்- மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, பொதுக்குழுஉறுப்பினர்கள் ஜீப்ரா ரவி,அரவிந்த், ஜெயந்தி,சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம் செல்வராஜ் ,கே.சி.மயில்சாமிமற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், பல்லடம் ,அவிநாசி ஆகிய தொகுதியின் தொண்டர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள், ஒன்றியம், வட்ட, கிளைக்கழகம், பகுதி , நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.  

    • அ.தி.மு.க. சார்பில் பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் 2 கிளையில் நடைபெற்றது.
    • பெரியகோட்டை ஊராட்சி கிளை செயலாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம் : 

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் 2 கிளையில் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ஊராட்சி துணை தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஐ.டி., விங் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய ஐடி.விங் செயலாளர் ஜாஹீர்உசேன், 

    பெரியகோட்டை ஊராட்சி கிளை செயலாளர்கள் இளம்பிறை எம்.சாதிக், கே.எஸ்.கே.செந்தில், சிடிசி .ரத்தினசாமி, எஸ்.மணிகண்டன், பாபு, குணசேகரன், விஜயகுமார், பாக்கியலட்சுமி , ராமசாமி, பாரதி, மயிலாத்தாள், துரைசாமி, நாகராஜ், வேல்முருகன்,ஐடி.விங் சுரேஷ் மற்றும் ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாள் நிகழ்ச்சி.

    பல்லடம் :

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 217வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்,பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளரும்,மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட அவை தலைவர் ராமசாமி,ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், பூபதி, நகர தலைவர் ஆறுக்குட்டி,நகர செயலாளர் வெங்கடேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரக்குமார், ஒன்றிய துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி,மற்றும் மாணவரணி, இளைஞரணி, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல பல்லடம் கடைவீதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் சிட்டிசன் ஈஸ்வரன், நகரத் தலைவர் வடிவேலன், மூத்த நிர்வாகி ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதன்படி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மற்றும் அலுவலர்கள், திமுக நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, பல்லடம் சுவாமி விவேகானந்தா, ப்ளூ பேர்ட், கண்ணம்மாள், யுனிவர்சல், பாரதி உள்ளிட்ட தனியார் பள்ளிகளிலும், அரசு அரசுப் பள்ளிகளிலும், அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    ×