search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் மழை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்தமாதம் நிலச்சரிவு ஏற்பட்டு 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

    புயல் சின்னம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவில் உருவான சூறாவளி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக மத்திய வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இதனால் கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பலத்த காற்று காரணமாக கேரள கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் மற்றும் பலத்த அலைகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதனால கடலோர கிராம மக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(23-ந்தேதி) மக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த கனமழை வருகிற 25-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(23-ந்தேதி) மக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த 3 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. அந்த குழுக்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க முகாம்களை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அது மட்டுமின்றி அனைத்து துறை அதிகாரிகளும், மீட்பு படை குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் வருகிற 23-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

    மேலும் கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரத்தையும் தெரிவித்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த 2 தினங்களாக கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கு மேலும் சில மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 23-ந்தேதி கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் இன்று முதல் நாளை மறுநாள்(22-ந்தேதி) வரை கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடல்சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதையும், கடலில் இறங்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    • 22-ந்தேதி காசர்கோடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • கேரள கடற்கரைகளில் கள்ளக்கடல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்தமாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சியின் காரணமாக கேரளாவில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அங்கு 21 மற்றும் 22-ந்தேதிகளில் கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திருவனந்தபுரம், கொல்லம் ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    நாளை(20-ந்தேதி) கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள்(21-ந்தேதி) இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், 22-ந்தேதி காசர்கோடு மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 22-ந்தேதி ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கேரள கடற்கரைகளில் கள்ளக்கடல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வருகிற 13-ந் தேதி வரை இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதன் காரணமாக கேரளம் மற்றும் தமிழக கடற்கரையோரங்களில் 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • திருவனந்தபுரத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    திருவனந்தபுரத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் செல்லும் 5 விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன. துபாயில் கோழிக்கோடு வந்த விமானம் அதிகாலை 2.45 மணிக்கு கொச்சியில் தரை இறங்கியது. இதேபோல் தோஹா, சார்ஜா, பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிக்கோடு வந்த விமானங்களும் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன.

    இந்த நிலையில் மழையின் தாக்கம் மேலும் அதிகமாகும் என்பதால் கோழிக்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 12-ந் தேதி மழையின் தீவிரம் இருக்கும் என்பதால், பல்வேறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் அருவிக்கரை அணையின் ஷட்டர்கள் 25 செ.மீட்டர் உயர்த்தப் பட்டதால், ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    எனவே நீர் நிலைகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    • கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.
    • கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    புயல் சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று கொச்சி மற்றும் திருச்சூரில் பல மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.


    கோழிக்கோட்டில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அங்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குள் தண்ணீர் சென்றது.

    இதனால் நோயாளிகள், பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். வார்டுகளுக்குள் தேங்கிய தண்ணீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி வார்டுகள் முழுவதும் சகதியாக காணப்பட்டது. இதனால் துப்புரவு பணியாளர்கள் இரவு முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.

    கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர். காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலன்(வயது70), பூத்தோட்ட புத்தன்காவு பகுதியை சேர்ந்த சரசன்(62) ஆகிய இருவரும் மின்னல் தாக்கி பலியாகினர்.

    கால்நடைகளுக்கு வைக்கோல் எடுத்துக்கொண்டு படகில் வந்த போது சரசனை மின்னல் தாக்கியது. இவர்கள் இருவரையும் சேர்த்து கேரள மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

    • எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், மலைப்பாங்கான இடங்களில் வசிப்போரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    வடமேற்கு வங்காள விரிகுடாவிற்கும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவிற்கும் இடையில் நிலை பெற்றுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களிலும் நாளை (11-ந்தேதி) இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், மலைப்பாங்கான இடங்களில் வசிப்போரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தனர்.
    • மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. மழை ஆரம்பித்த பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

    மலையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இது தவிர பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தனர். இருந்தும் கடந்த வாரம் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

    காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இந்த மாதம் மட்டும் மாநிலம் முழுவதும் 32 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 6 பேர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
    • சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது மலையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா முழுவதும் வருகிற 2-ந்தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    நேற்றும் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    ×