search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவை வழக்கு"

    • சில வழக்குகள், மேற்கு வங்காளம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
    • நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வக்கீல்கள் அமைப்புகள் தீர்வு காணவேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் 43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றின் மேல் முறையீட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக வேதனையை வெளிப்படுத்தினர்.

    நாடு முழுவதும் நீதி மன்றங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை நாங்கள் வேதனையுடன் வெளிப்படுத்துகிறோம். சில வழக்குகள், மேற்கு வங்காளம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

    சட்ட செயல்முறை நத்தை வேகத்தில் நகர்ந்தால் மனுதாரர்கள் ஏமாற்றமடையலாம். அவர்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க 11 அம்சங்களை கொண்ட விரிவான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்படுகிறது.

    நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வக்கீல்கள் அமைப்புகள் தீர்வு காணவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தீர்ப்பை கண்காணிக்கவும் ஐகோர்ட்டுக்கு 11 வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வழக்குகள் நிலுவையில் உள்ளதை கண்காணிக்க குழுக்களை அமைக்க ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழு 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணிக்கும்.

    • நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
    • வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    இம்மாதம் 1-ந் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25-ந் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது.

    நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-

    மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை.

    இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

    முதல் இடத்தில் அமெரிக்காவும் (80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு), இரண்டாம் இடத்தில் சீனாவும் (29 ஆயிரத்து 335 கோடி டாலர்), 3-வது இடத்தில் இந்தியாவும் (7 ஆயிரத்து 660 கோடி டாலர்) இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×