search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாடியிலிருந்து விழுந்து மாணவன் படுகாயம்"

    • மாடியில் இருந்து மவுனிஸ் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
    • தருமபுரி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அதியமான் ஆண்கள் பள்ளியில் ஜருகு பகுதியை சேர்ந்த மவுனிஸ் (வயது 16) என்ற மாணவன் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று பள்ளியின் முதல் மாடியில் இருந்து மவுனிஸ் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தருமபுரி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் மாணவன் பசி மயக்கத்தில் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளி கட்டிடங்களில் இருந்து தவறி விழுவதாக வரும் செய்திகளால் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

    ×