என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு மின்வாரியம்"

    • தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, இதறகான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயனர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பின் கடந்த வாரம் மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது கட்டாயம் என மீண்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஆன்லைன் மற்றும் மின் வாரிய அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகாமை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

    ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    - முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணைய முகவரியை திறக்க வேண்டும்

    - அடுத்து திரையில் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்

    - மொபைல் நம்பரை பதிவிட்டு, அதன் பின் கடவுச்சொல்லை பெற வேண்டும்

    - மொபைல் நம்பருக்கு வந்த கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

    - மின் இணைப்பை பயன்படுத்துவோர் விவரங்களை பதிவிட வேண்டும்

    - இனி இணைக்க வேண்டியவரின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

    - அடுத்து ஆதாரில் உள்ளதை போன்று பெயரை பதிவிட வேண்டும்

    - ஆதார் அட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    - இறுதியில் படிவத்தை சமர்பித்து விட்டு, பதிவேற்றம் செய்ததற்கான ரசீதை டவுன்லோட் செய்ய வேண்டும்

    • தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

    தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.

    மாவட்டம் வாரியமாக ஆராய்ந்து நீண்ட காலமாக பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    சென்னை:

    சென்னையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    சொந்த ஊரில் பணி, கேங்மேன்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் கேங்மேன்கள் நடத்தும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    * போராட்டம் தான் ஒருவனின் இருத்தலை உறுதி செய்யும்.

    * ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    * எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    * போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம்.

    * கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக்கூட இல்லை.

    * குறையை தவிர எதையும் செய்ய முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    * முதலில் கரண்டை கொடுங்கள், அதன் பின்னர் இலவச மின்சாரத்தை அளிக்கலாம் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மத்திய அரசின் நிறுவனம். அந்த நிறுவனம் தான் யாரெல்லாம் மின் உற்பத்தி செய்கிறார்களோ அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார்கள்

    தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    அதனால், தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

    இதுதொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
    • புயல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது. இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் ஃபெங்கல் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    புயல், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அதன்படி, டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகள், மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மின்சேவை, மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொண்டும், புரியாதவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார்.
    • சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குறிந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதலமைச்சர் மு.கஸ்டாலின், இந்த விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் பேசியிருக்கிறார்.

    தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இதுகுறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய சிக்கலுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.கஸ்டாலின், "அதானி குழுமம் தொடர்பாக வெளியில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார். இதுதொடர்பாக, பாமகவுக்கும், பாஜகவுக்கும் நான் எழுப்பும் கேள்வி என்னவென்றால், அதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க இந்த இரு கட்சிகளும் தயாரா? என்பதுதான்" என வினவியுள்ளார்.

    அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையோ, அல்லது வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. இதில் பாமகவுக்கு எந்த தயக்கமும் இல்லை.

    ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அவருடைய பதில் என்ன? என்பதுதான்.

    இந்த வினாவிற்கு விடையளிக்க முடியாத மு.க.ஸ்டாலின் அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறி மோசடி-ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொள்வது என்?

    அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பதில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் இடையே நேரடியாக எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்பதுதான்.

    ஆனால் இந்த கேள்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொண்டும், புரியாதவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார்; பதிலளிக்க மறுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினால், தேசிய அளவில் நடைபெற்ற அதானி ஊழல் குறித்து பா.ம.க. வலியுறுத்தவில்லை? அதானிக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கமில்லை? என்று தி.மு.க. அதன் கூலிப்படையினரை வைத்து எதிர்க்கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் கடன் கமையில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக வட்டி செலுத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும், தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் நீந்திக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அதானி குழுமம் போன்ற பல நிறுவனங்களிடம் இருந்து, தங்களுக்குக் கிடைக்கும் பயன்களுக்காக, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை ஆட்சியாளர்கள் வாங்குவதுதான்.

    ஆட்சியாளர்கள் இலாபம் பெறுவதற்காக மின்சார வாரியத்தை நஷ்டமாக்கி, அதை சரி செய்வதற்காக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் பணத்தைப் பிடுங்குவதை அனுமதிக்க முடியாது. அதற்காகத்தான் அதானி குழுமத்திடம் இருந்து மின்சார வாரியம் கையூட்டு பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.

    மடியில் கணமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. அதானி குழுமத்திடம் இருந்து, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கையூட்டு பெறவில்லை என்றால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடலாம். அவ்வாறு செய்யாமல், இந்த சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?

    அதானி குழுமத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கோ ஆணையிடுவதற்கு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும்.
    • டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியான செய்திகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கருத்து கூற விரும்புவோர் மின் வாரிய இணையதளத்தில் லேட்டஸ்ட் நியூஸ் பகுதிக்கு சென்று மின் கட்டண மனு மீதான லிங்கை 'கிளிக்' செய்ய வேண்டும்.
    • இணையதளத்தில் தெரிவிக்கும் கருத்துக்கு மின் வாரியம் விரைந்து பதில் அளிக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயருகிறது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50-ம், 300 யூனிட்வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50-ம் உயர்த்தப்படுகிறது.

    இதே போல் 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டு வரை மின் நுகர்வு, செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக மின்வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தி தர கோரும் மனுவை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமீபத்தில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம் மின் கட்டண மனுக்களை இணையதளத்தில் வெளியிட்டு, அவற்றின் மீது பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அடுத்த 30 நாட்களுக்குள் அதாவது ஆகஸ்டு 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் அனைவரின் கருத்துக்களுக்கும் உரிய பதில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

    அதன்படி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் www.tnerc.gov.in மற்றும் மின் வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணைய தளங்களில் மின் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இவற்றை மக்கள் படித்து பார்த்து ஆலோசனை மற்றும் கருத்துக்களை ஆகஸ்டு 17-க்குள் ஆணைய செயலர் மற்றும் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலருக்கும் தபாலில் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தபாலில் அனுப்ப காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து இணையதளத்தில் கருத்துக்களை தெரிவிக்கும் வசதியை மின்வாரியம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.

    இதன் வாயிலாக கருத்து கூற விரும்புவோர் மின் வாரிய இணையதளத்தில் லேட்டஸ்ட் நியூஸ் பகுதிக்கு சென்று மின் கட்டண மனு மீதான லிங்கை 'கிளிக்' செய்ய வேண்டும்.

    அந்த பக்கத்தின் கடைசியில் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் 'லிங்க்' உள்ளது. அதில் சென்று செல்போன் எண்ணை பதிவிட்டதும், அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை ரகசிய எண்ணை பதிவிட வேண்டும்.

    பிறகு அந்த பக்கத்திற்கு சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம். இணையதளத்தில் தெரிவிக்கும் கருத்துக்கு மின் வாரியம் விரைந்து பதில் அளிக்கும்.

    தற்போது பலரும் செல்போன்களை பயன்படுத்துவதால் அதிலும் மின்வாரிய இணையதளத்திற்கு சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ×