என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தி.மு.க. செயலாளர்"
- ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.
திருப்பூர் :
பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு, அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி தருமாறு சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால் இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022 ல் ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காகோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.
தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வரும் ஜூன் 30-ல் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிவாசகம் வரவேற்புரையாற்றினார்.
- இளைஞர் அணி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் திராவிட மாடல் ஆட்சியின் 2-வது சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான எஸ். வி. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிவாசகம் வரவேற்புரையாற்றினார் . கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாரை சிவா, திருப்பூர் சந்துரு ஆகியோர் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் பேசியதாவது:-
தேர்தல் வாக்குறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அத்தனை திட்டங்களிலும் 87 சதவீத திட்டங்கள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன .குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரியில் படித்து வரும் 2.20 லட்சம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1937 அரசு பள்ளிகளில் 1.48 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 39.21 லட்சம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பயணித்து சராசரியாக மாதம் ரூ.888 பணத்தை மிச்சப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினசரி ஒரு பொய்களை கூறி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் . தலைவர் கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர வேண்டும். பதவி உயர்வு பெற வேண்டும். அரசு பதவிகளில் வகிக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் சட்டத்தை இயற்றியதால் தான் அண்ணாமலை கூட இன்று ஐ.பி.எஸ்.ஆக பணியாற்ற முடிந்தது.
அண்ணாமலையின் சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். தி.மு.க. பனங்காட்டு நரி. கடந்த 50 ஆண்டுகளில் உங்களை போன்ற எத்தனையோ வேடதாரிகளை கழக அரசு சந்தித்துள்ளது. தி.மு.க. வளர்ந்து பரந்த ஆலமரம். இதன் ஆணிவேரை கூட உங்களால் தொட முடியாது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
கூட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் ,மாவட்ட துணைச்செயலாளர் பிரபாவதி ,பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ,ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சசிகுமார் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் புவனேஸ்வரி, செல்வகுமார், நகரஅவை தலைவர் கதிரவன், சின்னக்காம்பாளையம் பேரூர் செயலாளர் பன்னீர்செல்வம், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி உட்பட தாராபுரம் ஒன்றிய கழக மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- வேலுச்சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடுமலை :
உடுமலை தி.மு.க. நகர செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் சி. வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சே. செல்வராஜ், சொர்க்கம் பழனிச்சாமி, உடுமலை நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம், முன்னாள் அமைப்பாளர் குமார்சந்திரன், ஆர். டி. எஸ். தனபால், நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி, ரீகன், சாந்தி கிருபாகரன் உள்ளிட்டோர் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்