என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆகஸ்டு"
- மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
- வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
பல்லடம் :
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி 600 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு 25 சதவீதம் 1,200 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 50 சதவீதம், 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம், மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது. இந்த சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்துகள் கேட்கப்பட்டன.
பெருவாரியான மக்களிடம் ஆட்சேபனை எழுந்துள்ள நிலையில், வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் மறுசீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என நகராட்சி நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள்,1,263 வணிக நிறுவனங்கள், 546 தொழில் கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.சொத்துவரி மறுசீராய்வு தொடர்பாக கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளன. தற்போது, பழைய வார்டுகளில் இருந்து புதிய வார்டுகள் மாற்றும் பணி நடந்து வருகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய வார்டு அடிப்படையில், வீட்டு கதவு எண்கள் மாற்றி அமைக்கப்படும். அது வரை பழைய எண்களே பயன்பாட்டில் இருக்கும். மறுசீராய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்கு பின்பு துவங்கும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.