என் மலர்
நீங்கள் தேடியது "அமலாபால்"
- பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.
- பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.
'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.
ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு 'இலை' என்ற ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
'சிந்து சமவெளி' படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
நாம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் செய்யக்கூடாது என்பதை அந்த படம் வெளியான பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போது கேவலம் எனக்கு 17 வயது மட்டும் தான். இளம் நடிகை என்பதால் இயக்குனர் சொன்னதை கேட்டு குருட்டுத்தனமாக சம்மதித்து நடித்தேன்.
இதனால் நான் வேதனைக்கு உள்ளாகியது மட்டுமின்றி, எனது சினிமா வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நான் நடித்த 'மைனா' பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.

அதன் பிறகு எனக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற மாபெரும் நடிகர்கள் கூட போன் செய்தார்கள். விபரீதமான எதிர்ப்பு காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.
நான் அதன்பிறகு சினிமாவில் வெற்றி பெற்று சாதித்தேன். ஆனால் அந்த விவாதத்துக்குரிய படம் மீண்டும் ரீலீஸ் ஆனது. அப்பொழுது கூட புரமோஷனல் மெட்டீரியல் தவறான வழியில் சென்று விவாதத்தை ஏற்படுத்தியது.
இவற்றுக்கெல்லாம் பின்னணி சினிமா கேவலம் வியாபாரத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.
இதை கருத்தில் கொண்டு ஒரு நடிகை எவ்வளவு பலமான அடி விழுந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை எனக்கு புரிய வைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
- இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கைதி
இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

அஜய் தேவ்கன்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'போலோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமலாபால் வருகிற டிசம்பர் மாதம் முதல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Good tidings!🌸 https://t.co/uxdNoVX8rM
— Amala Paul ⭐️ (@Amala_ams) November 1, 2022
- மாற்று மதத்தவர் என்பதால் கேரளாவில் உள்ள மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்ய நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு பார்ப்பது வருத்தம் அளிப்பதாக அமலாபால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பாலும் நேற்று முன்தினம் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர்.

அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.

அதில் திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் நிர்வாகிகள் கூறும்போது, இக்கோவிலில் இதுவரை கடைபிடித்து வந்த நடைமுறைப்படியே நடிகை அமலா பால் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இக்கோவிலுக்கு எராளமானோர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வரத்தான் செய்கிறார்கள். அவர்களை பற்றி வெளியே எதுவும் தெரியாததல் பிரச்சினை இல்லை. நடிகை அமலா பாலை எல்லோருக்கும் தெரியும். அவரை கோவிலுக்குள் அனுமதித்தால் கோவில் நடைமுறையை மீறியதாக சர்ச்சை ஏற்படும். எனவே அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை, என்றனர்.
- சமீபத்தில் திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் மாற்று மதத்தவர் என்பதால் அமலா பால் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
- இது தொடர்பாக அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

குடும்பத்தினருடன் அமலாபால்
சமீபத்தில் பிரசித்தி பெற்ற கேரளா திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இது தொடர்பாக அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.
அதில் திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் அமலாபால்
இந்நிலையில், நடிகை அமலா பால் தற்போது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிடுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
- பிரித்விராஜ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.
- இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

ஆடு ஜீவிதம்
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த டிரைலரில் இடம்பெற்றிருந்த பிரித்விராஜ், அமலாபால் உதட்டு முத்தம் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமலாபால் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

ஆடு ஜீவிதம்
அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை சொல்லும் போதே பிரித்விராஜ், உதட்டு முத்தக்காட்சி பற்றி விளக்கமாக கூறினார். படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக்காட்சி மிகவும் அவசியம் என்பதால்தான் நான் நடித்தேன். மேலும், கதைக்கு தேவை என்பதற்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். உதட்டு முத்தம் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று கூறினார்.
- பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலாபால்.
- இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இணையத்தில் இவர் புகைப்படங்களை ரசிப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் , நடிகை அமலாபால் நீலகிரியிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ள இவர் சிவப்பினால் ஓவியம் தீட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்நிலையில், நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இதனை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
- சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார்.
- நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.
சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அமலாபால்- ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலாபால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும்
- சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது. பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பிருத்விராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- அமலா பால் நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- விலைமதிப்பற்ற கர்ப்ப பயணத்தின் போது என்னுடன் இருந்ததற்கு நன்றி.
சிந்து சமவெளி, வேலையில்லா பட்டதாரி 2, தெய்வத்திருமகள் உள்பட ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடு ஜீவிதம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அமலா பால் கடந்த ஆண்டு தனது நண்பர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் தனது கர்ப்பத்தை அறிவித்தார்.
தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக அவரது கணவர் ஜெகத் தேசாய் அருகிலேயே இருந்து கவனித்து வருகிறார். இதற்கு நன்றி தெரிவித்து அமலா பால் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
என் பக்கத்தில் கழித்த இரவுகளில் இருந்து, என் அசவுகரியங்களை மெதுவாகத் தணித்து, என் மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் என்னை வலிமையால் நிரப்பிய உங்களின் உற்சாகமான வார்த்தைகள், இந்த விலைமதிப்பற்ற கர்ப்பப் பயணத்தின் போது என்னுடன் இருந்ததற்கு நன்றி.
என் நம்பிக்கை குலைந்த சிறிய தருணங்களில் கூட எனக்கு ஆதரவாக பறந்து செல்லும் உங்கள் விருப்பம் என் இதயத்தை நன்றியுடனும் அன்புடனும் நிரப்புகிறது. உங்களைப் போன்ற ஒரு மனிதனுக்கு நான் இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே அற்புதமான ஒன்றைச் செய்திருக்க வேண்டும். எனது நிலையான வலிமை, அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவாக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை வார்த்தைகளை விட அதிகமாக நேசிக்கிறேன்
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- முதல் காட்சி முடியும் முன்பே திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாகவும் ஜோதிகா விமர்சித்தார்.
- ஜோதிகாவின் பதிவை நடிகை அமலாபால் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் சமீபத்தில் திரைக்கு வந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்களை கண்டித்தார். முதல் காட்சி முடியும் முன்பே திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாகவும் விமர்சித்தார். இது பரபரப்பானது. இந்த நிலையில் ஜோதிகாவின் பதிவை நடிகை அமலாபால் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாபால் வெளியிட்டுள்ள பதிவில், "கங்குவா படத்தை விமர்சிக்கின்றனர். சினிமா துறையில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான முயற்சிகளை வரவேற்க வேண்டும். தயாரிப்பாளரின் உழைப்பை பாராட்ட வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
டைரக்டர் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், "கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் சூர்யா போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமலாபாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
கோவிலில் அமைந்துள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். அமலாபாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.