search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர் அறக்கட்டளை"

    • 1960-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்த நூற்றுக்கு மேற்பட்டமுன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
    • போட்டித் தேர்வுகளான நீட், அரசுப் பதவி நியமனத் தேர்வு குரூப் 1, 2, 3, 4 வரை தயார் செய்வதற்கு தேவையான புத்தகங்களை திரட்டி நூலகம் உருவாக்குவது.

    அவினாசி :

    அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் என். ஆர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு செயலாளர் சு நடராசன், பொருளாளர் செ.கணேஷ், துணைத்தலைவர் ப.சண்முகசுந்தரம், துணைச்செயலாளர் அ. தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 10செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1960-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்த நூற்றுக்கு மேற்பட்டமுன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளியில் கலையரங்கம் அமைப்பது ,போட்டித் தேர்வுகளான நீட், அரசுப் பதவி நியமனத் தேர்வுகளான குரூப் 1, 2, 3, 4 வரை தயார் செய்வதற்கு தேவையான புத்தகங்களை திரட்டி ஒரு நூலகம் உருவாக்குவது. வறுமையில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியரின் உயர்கல்விக்கு உதவுதல், நெகிழி ஒழிப்பு, புகைபிடித்தலின் கேடு, மதுவை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. விளையாட்டில் சாதனை புரியும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுக்கு தேவையான பொருட்கள், மற்றும் பயிற்சிகள் வழங்குவது.

    பசுமையை பாதுகாப்பது. மாணவர்கள் உயர்கல்வி, தொழில்கல்வி பெறுவதற்கு வழிகாட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×