search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைவான் பயணம்"

    • தைவான் சென்றுள்ள நான்சி பெலோசி அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
    • தைவானை அமெரிக்கா கைவிடாது என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

    தைபே:

    அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தைவான் சென்றார்.

    தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், நான்சி பெலோசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

    அதன்பின் நான்சி பெலோசி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. தைவானிலும், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது. தைவானை அமெரிக்கா கைவிட்டுவிடாது. என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல்.

    வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தைவான். சவால்களை சந்தித்தபோதிலும் அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது.

    இதுவரை இல்லாத வகையில் தைவானுடன் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செய்தியையே நாங்கள் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்து அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசியபின் நான்சி பெலோசி தனியாக அமெரிக்க விமானம் ஒன்றில் தைபே நகரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    • அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார்.
    • அவரது இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    தைபே சிட்டி:

    தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.

    அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

    சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சீனாவின் ஓர் அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என கேட்டு கொண்டார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

    ஏற்கனவே உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதேபோன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என தெரிவிக்கப்பட்டது. நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, தைவானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    ×