search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா"

    • இறுதிப்போட்டியின்போது இருந்த மனநிலை குறித்து டோனி மனம் திறந்துள்ளார்.
    • இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதுமே எனது நண்பர்கள் எழுந்து வெளியே சென்றுவிட்டனர்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பும்ரா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா என பலரும் முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியின்போது இருந்த தனது மனநிலை குறித்து இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.

     

    சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, இறுதிப்போட்டியை எனது வீட்டில் வைத்து பார்த்தோம். எனது நண்பர்கள் சிலரும் என்னுடன் பார்த்தனர். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதுமே எனது நண்பர்கள் எழுந்து வெளியே சென்றுவிட்டனர்.

    அதை பார்க்காதே, எழுந்து வா, இந்தியாவுக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் ஒருவன் மட்டுமே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இது கிரிக்கெட், எதுவும் முடிவுக்கு வராத வரை எதையும் முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு என்று கூறினேன்.

     

    ஆனால் அவர்கள் யாரும் என்னை நம்பவில்லை. நானே அதற்குப் பின்னர் அவர்கள் சொல்வது சரிதானோ என்று நினைக்கத் தொடங்கினேன். நீங்கள் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால் இப்போது என்ன நடக்கும் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுகிறது என்றால் அந்த உணர்வை நினைத்துப் பாருங்கள்.

    ஆனால் அவர்களின் [தென் ஆப்பிரிக்காவின்] பேட்டிங் ஆர்டர் சற்று வலுவில்லாமல் இருந்ததால் எனக்குள் திடமான நம்பிக்கை இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
    • இதனால் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

    துபாய்:

    வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.

    வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது.

    இங்கிலாந்து 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வங்கதேசம் - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா படைத்தார்.

    இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 12602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்து 11817 பந்துகளிலேயே ரபாடா 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்துள்ளன.

    இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.

    முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    • மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
    • கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தென் ஆப்பிரிக்கா பழிதீர்த்துக் கொண்டது.

    துபாய்:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழியும் தீர்த்துக் கொண்டது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பெத் மூனி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். எல்லீஸ் பெரி 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 42 ரன்னில் வெளியேறினார். அனேகே போஸ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
    • இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. நாளை துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் சார்ஜாவில் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

    நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஹேலே மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் முறையே 10 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டஃபைன் டெய்லர் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் இணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது.

    ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நொன்குலேகோ லாபா 4 விக்கெட்டுகளையும், மரிசேன் கப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வொல்வூராட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் முறையே 59 மற்றும் 57 ரன்களை அடித்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

    • ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
    • தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க செய்தது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதே வேகத்தில் மூன்றாவது போட்டியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், அதில் மட்டும் தோல்வியை தழுவியது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர் ரகமத் ஷா அவுட் ஆன விதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் ஒன்பதாவது ஓவரை வீசிய நிகிடியின் பந்தை ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரகமனுள்ளா குர்பாஸ் ஓங்கி அடித்தார்.

    எனினும், அந்த பந்து நிகிடி கையை நோக்கி சென்றது. அதனை பிடிக்க நிகிடி முயற்சிக்க, அது அவரது கையில் இருந்து நழுவி அருகே ரன் ஓட முயற்சித்த ரகமத் ஷாவின் தலையில் பட்டு, நேரடியாக ஸ்டம்ப்களை தாக்கியது. பந்து ஸ்டம்ப்களை அடிக்கும் போது அவர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருக்க அவர் அவுட் என தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் குர்பாஸ் 89 ரன்னில் அவுட்டானார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி, பெலுக்வாயோ, நபா பீட்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினர்.

    டோனி சோர்சி 26 ரன்னும், பவுமா 22 ரன்னும், ஹென்ரிக் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்கிரம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. மார்கிரம் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆனாலும், ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குர்பாசுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் குர்பாஸ் சதமடித்து அசத்தினார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 105 ரன்னும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தனர்.

    பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.

    ×