search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுத்திரக்கனி"

    • விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

     


    இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பரபர காட்சிகளை கொண்ட டீசரில் படத்தின் வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. டீசரின் முடிவில் வரும் தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் இடம்பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்
    • இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிக்காமல் இருந்த நிலையில் எடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் அந்தகன் படத்தை இயக்குகிறார்.

    மேலும் இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்தகன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
    • தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர்

    சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

    தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர். பல தெலுங்கு நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.

    சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

    இதில் இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, அப்பாக்கள் பற்றிய கதை என்றாலே தான் எமோஷனலாகி விடுவதாகப் பேசியுள்ளார். நிகழ்வில் பேசிய அவர், "அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

    'ராமம் ராகவம்' படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும் சின்னப் படம் எடுத்துவிட்டு அதைக் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியதாக உள்ளது. இப்படித்தான் இதற்கு முன்பு நான் நடித்த சில சிறிய பட்ஜெட் படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். அதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா சமுத்திரக்கனியை பாராட்டி சில வார்த்திகளை பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி' என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது.
    • இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    'ராமம் ராகவம்' படத்தின் முதல் காட்சியை (கிளிம்ப்ஸ்) தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். தந்தை- மகனுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

    இந்த படத்தில் தன்ராஜ் கொரானானி இயக்குனராக அறிமுகமாவது மட்டுமின்றி நடித்துள்ளார். மேலும், தன்ராஜின் அப்பாவாக சமுத்திரக்கனியும் நடிக்கிறார். 

    சமீபத்தில் வெளியான ஹனுமான் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார். 

    இந்த படத்தின் முதல் காட்சி நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி' என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது. மேலும், இந்த வீடியோவின் இறுதியில் 'என் காதல் ஆரம்பமானது உன்னால் தான், காதலர் தின வாழ்த்துக்கள்' என்று சமுத்திரக்கனி பேசும் வசனமும் உள்ளது.

    இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். 

    2021-ம் ஆண்டில் வெளியான 'சாஷி' படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். துர்காபிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை பிருத்விபோலவரபு தயாரிக்கிறார்.

    • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம்.
    • திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் திரு.மாணிக்கம் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. மாணிக்கம் என்ற ஒரு மனிதன் எப்படி திரு.மாணிக்கமாக உயர்கிறான் என்பதே இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.

     

    தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரு. மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    • சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள திரைப்படம் 'ராஜாகிளி'.
    • இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக் கூத்தல்’.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    தலைக்கூத்தல்

    இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    தலைக்கூத்தல்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பாடலான 'உச்சத்துல வெண்ணிலவு' பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ள இந்த பாடலை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக் கூத்தல்’.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    தலைக்கூத்தல்

    இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    தலைக்கூத்தல்

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா, நீங்க இத செய்வீங்களா ? என்ற வசனம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'தலைக் கூத்தல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி.
    • இவரின் அலுவலகத்தில் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார்.

    தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10-வது தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்துள்ளார். அவர் அலுவலக வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழை கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.


    சமுத்திரக்கனி

    அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. அலுவலக ஊழியர்கள் இதுபற்றி சமுத்திரக்கனியின் மானேஜர் விவேக்குக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


    சமுத்திரக்கனி

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து சமுத்திரக்கனியின் அலுவலகத்தில் புகுந்த பெண் யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'ராஜா கிளி'.
    • இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் 'ராஜா கிளி'. இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார். 'சாட்டை', 'அப்பா', 'வினோதய சித்தம்' ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

    இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

     

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ், படத்தொகுப்பாளராக ஆர். சுதர்சன் பணியாற்றுகின்றனர். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

    இப்படம் குறித்து இயக்குனர் தம்பி ராமையா கூறியது, "இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குனரும் கூட. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர்.

     

    கிட்டத்தட்ட 12 இயக்குனர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி. பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.

     

    இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும். எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்" என்றார்.

    ×